கோச் பேசிட்டு இருக்கும்போதே பின்னாடி ‘சைலண்டா’ என்ன நடக்குது பார்த்தீங்களா..! கேமராவில் சிக்கிய சீக்ரெட்.. KKR-ஐ வெளுத்து வாங்கிய முன்னாள் கேப்டன்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியையும், அதன் கேப்டனையும் கௌதம் கம்பீர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தோனி (Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கும், இயான் மோர்கன் (Eoin Morgan) தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணிக்கும் இடையேயான ஐபிஎல் (IPL) லீக் போட்டி நேற்று முன்தினம் அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 45 ரன்கள் எடுத்திருந்தார்.

இதனை அடுத்து விளையாடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக டு பிளசிஸ் 43 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 40 ரன்களும் எடுத்தனர். குறிப்பாக 7-வது வீரராக களமிறங்கிய ஆல்ரவுண்டர் ஜடேஜா 8 பந்துகளில் 22 ரன்கள் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். இதுதான் சென்னை அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த நிலையில் இப்போட்டியில் டக்அவுட்டில் இருந்து கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கனுக்கு அந்த அணியின் நிர்வாகம் ஆலோசனை வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. முன்னதாக மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போதும் இதேபோல் அந்த அணியின் ஆய்வாளர் நாதன் லீமன் (Nathan Leamon) டக்அவுட்டில் இருந்து மறைமுகமாக சிக்னல் செய்தார்.

அதில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் (Brendon McCullum), டக் அவுட்டில் இருந்து பேட்டி கொடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த ஆய்வாளர் நாதன் லீமன், மேசையின் மேல் நம்பர் பதாகைகளை வைத்து கேப்டன் இயான் மோர்கனுக்கு சிக்னல் கொடுத்தார். இது அப்படியே கேமராவில் பதிவாகியுள்ளது.

கொல்கத்தா அணியின் இந்த செயலுக்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் கௌதம் கம்பீர் (Gautam Gambhir) கடும் விமர்சனம் செய்துள்ளார். அதில், ‘எல்லா செய்தியும் வெளியே இருந்தே வந்தால், அப்புறம் கேப்டன் என்ற ஒருவர் தேவையே இல்லை. நான் இப்படியொரு சூழ்நிலையில் இருந்திருந்தால், நிச்சயம் கேப்டன் பதவியில் இருந்து விலகியிருப்பேன். இதுவொரு சரியாக அணுமுறை இல்லை’ என கம்பீர் கூறியுள்ளார்.

அப்போட்டியில் மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று (28.09.2021) ஷார்ஜா (Sharjah) மைதானத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணியை எதிர்த்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி விளையாட உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்