என்ன பொசுக்குன்னு 'இப்படி' சொல்லிட்டீங்க...! 'ஹாக்கியில் இந்திய அணி பதக்கம் வென்றது குறித்து கம்பீர் போட்ட ட்வீட்...' - கொந்தளிக்கும் நெட்டிசன்கள்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி பிரிவில் 41 ஆண்டுகள் கழித்து இந்திய வீரர்கள் பெருமை சேர்த்துள்ளனர்.

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி. ஆனால் இந்திய மக்களை பொறுத்தவரை ஹாக்கியில் கவனம் செலுத்துவதை விட கிரிக்கெட் என்றால் தான் அதிக உற்சாகம் கொள்வர்.

சிலர் கிரிக்கெட்டை தான் தேசிய விளையாட்டாகவே நம்ப செய்கின்றனர். இந்நிலையில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியில் வெண்கல பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் தனது ட்விட்டரில் பதிவிட்ட கருத்து தற்போது வைரலாகி வருகிறது.

அதில், '1983, 2007, 2011 உலகக்கோப்பை வெற்றிகளை மறப்போம். ஹாக்கியில் இந்த பதக்கம் எந்த ஒரு உலகக்கோப்பையை விடவும் பெரியது' என பதிவிட்டுள்ளார்.

கவுதம் கம்பீரின் இந்த கருத்து ரசிகர்களையும், நெட்டிசன்களையும் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒருசிலர் கமெண்ட் பாக்ஸ்ஸில் 'இரண்டு விளையாட்டுகளையும் ஒப்பிடுவதே தவறு', 'சார் இது அரசியல்வாதியின் ட்வீட் போல் உள்ளதே தவிர விளையாட்டு வீரரின் கருத்து போல் தெரியவில்லை. மற்ற சாதனைகளை குறைத்து மதிப்பிட வேண்டாம்' என காரசார கமெண்ட் இட்டு வருகின்றனர்.

வேறு சிலரோ 'சர்ச்சைகள் இல்லாமல் ஹாக்கி வெற்றியை புகழுங்கள் கம்பீர்' எனவும் கூறிவருகின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்