தோனி பற்றிய கேள்வி.. "இப்டி கேக்குறதே முட்டாள்தனம் தான்'ங்க.." விமர்சித்த கம்பீர்.. ரசிகர்கள் வாய்க்கு போட்ட பூட்டு

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் முன்னாள் வீரர்களான தோனி மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு உள்ளதாக பல முறை தகவல்கள் வெளியாகி, பரபரப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

இதற்கு மிக முக்கிய காரணம், தோனியைப் பாராட்டி கருத்துக்கள் வெளிவரும் போது, அதற்கு நேர்மாறான விஷயங்களை கம்பீர் செய்வது தான்.

உதாரணத்திற்கு 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை இந்திய அணி வென்றது பற்றி, பலரும் தோனியைத் தான் அதிகம் பாராட்டினார்கள். ஆனால், தன்னுடைய இன்னிங்ஸும் ஒரு முக்கிய காரணம் என்பதை பற்றி யாரும் அதிகம் பேசவில்லை என்பதை, சற்று மறைமுகமாக கம்பீர் வெளிப்படுத்தி இருந்ததும் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

தோனி பற்றி கம்பீர்

இதனால், கம்பீர் மற்றும் தோனி ஆகிய இருவருக்கும் இடையில், ஏதோ பெரிய பிளவு இருக்கும் என்ற கருத்து தான் பரவலாக இருந்து வந்தது. இந்நிலையில், தோனியுடன் தனக்கு ஏதேனும் சண்டை இருக்கிறதா என்பது பற்றி, கவுதம் கம்பீர் மனம் திறந்து சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

முட்டாள்தனம்

தோனியை உங்களுக்கு பிடிக்கவில்லை என மக்கள் ஏன் நினைக்கிறார்கள் என கம்பீரிடம் கேட்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலளித்த கம்பீர், "அப்படி நினைப்பது ஒரு முட்டாள்தனம். தோனி மீது எனக்கு நிறைய மரியாதை உள்ளது. அதை எங்கு வேண்டுமானாலும் என்னால் சொல்ல முடியும். 138 கோடி மக்கள் முன்னிலையிலும் நான் வேண்டுமென்றால் சொல்லுவேன்.

முதல் ஆளா நிப்பேன்

அவருக்கு ஏதாவது தேவை என்றால், முதல் ஆளாக நான் நிற்பேன். அவர் இந்திய கிரிக்கெட்டிற்காக நிறைய செய்துள்ளார். அவர் ஒரு சிறந்த மனிதரும் கூட. எனக்கும் தோனிக்கும் கிரிக்கெட் மீது வெவ்வேறு பார்வைகள் இருந்தன. தோனி அணுகும் முறையும், நான் கிரிக்கெட்டை அணுகும் முறையும் அதிகம் வேறுபட்டு இருக்கும்.

மரியாதை உண்டு

தோனி கேப்டனாக இருந்த சமயத்தில், துணை கேப்டனாக நான் நீண்ட நாட்கள் இருந்துள்ளேன். அவரின் கேப்டன் பதவிக் காலத்தில், மிக நீண்ட காலம் துணை கேப்டனாக கூட நான் தான் இருந்திருக்கக் கூடும். அவரை போன்ற ஒரு கிரிக்கெட் வீரருக்கும், சிறந்த மனிதருக்கும் நிச்சயம் எனது மரியாதையை உண்டு. அதனை எத்தனை முறை வேண்டுமானாலும் நான் திரும்ப திரும்ப சொல்வேன்.

அதே போல, தோனி மட்டும் மூன்றாவது வீரராக களமிறங்கி இருந்தால், நிச்சயம் பல உலக சாதனைகளை அவர் படைத்திருப்பார்" என தோனி குறித்து தன்னுடைய கருத்தினை கம்பீர் தெரிவித்துள்ளார்.

கம்பீர் மற்றும் தோனி என்றாலே, இருவரும் எதிரிகள் என்பதை போல தான் ரசிகர்கள் பார்த்து வந்தனர். ஆனால், கம்பீர் தற்போது கூறிய கருத்து, அவர்களுக்குள் ஒன்றுமே இல்லை என்பதை உறுதி செய்துள்ளது.

MSDHONI, GAUTAMGAMBHIR, எம்.எஸ். தோனி, கவுதம் கம்பீர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்