"அந்த சிஎஸ்கே பிளேயர நாங்க எடுத்தது தான் 'செம' சம்பவம்.." வாய்ப்பு கொடுக்காத தோனி.. தட்டித் தூக்கிய கம்பீர்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெங்களூரில், கடந்த இரண்டு தினங்கள் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலம், மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

Advertising
>
Advertising

அனைத்து அணிகளும், தங்கள் ஏற்கனவே திட்டம் போட்டு வைத்திருந்த வீரர்களை அணியில் தூக்க, கடுமையாக போட்டி போட்டனர்.

அதில், பல அணிகள் வெற்றி கண்டது. சில அணிகள், அவர்கள் எதிர்பார்த்த வீரர்களை எடுக்க முடியாமல் போனது. என்றாலும் கூட, மாற்று வீரர்களை சிறந்த முறையில் தேர்வு செய்து அசத்தியிருந்தது. முதல் நாளில் வீரர்களை எடுக்க அதிக ஆர்வம் காட்டாத அணிகள் கூட, இரண்டாம் நாளில் சிறப்பாக வீரர்களைத் தேர்வு செய்து பட்டையைக் கிளப்பியிருந்தது.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்

மேலும், 15 ஆவது ஐபிஎல் சீசனில், புதிதாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரண்டு அணிகள் களமிறங்கவுள்ளது. இந்த அணிகளும், கடந்த இரண்டு தினங்களில் ஏலத்தில் பங்கெடுத்து, சிறந்த வீரர்களைத் தேர்வு செய்தனர். இதில், லக்னோ அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டிருந்தார்.

கேப்டன் கே எல் ராகுல்

கம்பீரும் ஏலத்தில் பங்கெடுத்திருந்தார். அவருக்கு அதிக அனுபவம் உள்ள காரணத்தினால், அணிக்கான வீரர்களை சிறந்த முறையில் தேர்ந்தெடுத்து, அணியில் சேர்க்க முயல்வார் என்பதால், கம்பீரின் திட்டம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும், ரசிகர்கள் மத்தியில் உருவாகியிருந்தது. கே எல் ராகுல், மார்கஸ் ஸ்டியோனிஸ் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய 3 வீரர்களை ஏலத்திற்கு முன்பாக, லக்னோ அணி ஒப்பந்தம் செய்திருந்தது.

Mentor கம்பீர்

தொடர்ந்து நடைபெற்ற ஏலத்திலும், டி காக், தீபக் ஹூடா, ஜேசன் ஹோல்டர், மனிஷ் பாண்டே, க்ருணால் பாண்டியா உள்ளிட்ட பல சிறந்த வீரர்களையும், லக்னோ அணி தட்டித் தூக்கியிருந்தது. அதே போல, சில சிறந்த வீரர்களை சரியாக திட்டம் போட்டு, குறைந்த தொகைக்கும் அவர்கள் வாங்கினர். இந்நிலையில், ஐபிஎல் மெகா ஏலம் பற்றி பேசிய கவுதம் கம்பீர், 'நான் இதற்கு முன்பாக ஏலம் நடைபெறும் போது பங்கேற்றுள்ளேன். ஆனால்,ஒரு முழு அணியை முதலில் இருந்தே உருவாக்க வேண்டி, ஏலத்தில் பங்கு எடுத்ததில்லை' என தெரிவித்தார்.

முன்னாள் சிஎஸ்கே வீரர்

தொடர்ந்து, இரண்டாம் நாள் ஏலம் குறித்து பேசிய கவுதம் கம்பீர், 'கிருஷ்ணப்பா கவுதமை இரண்டாம் நாளில், நாங்கள் 90 லட்ச ரூபாய்க்கு வாங்கிக் கொண்டது தான், சிறப்பான ஒப்பந்தமாக நான் கருதுகிறேன். ஏனென்றால், கடந்த சீசனில், சென்னை அணி அவரை 9.25 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தது. ஆனால், அவரை நாங்கள் மிகவும் குறைந்த விலையில் வாங்கிக் கொண்டோம்.


க்ருணால் பாண்டியாவை ஏலத்தில் எடுத்த பிறகு, அவருடன் 8 ஆவது இடத்தில் இணைந்து செயல்பட, ஒருவரைத் தேடிக் கொண்டிருந்தோம். அதற்கு கவுதம் பொருத்தமான தேர்வாக இருந்தார்' என கவுதம் கம்பீர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அணியில் வாய்ப்பு

கடந்த ஆண்டு ஏலத்தில், கவுதமை, 9.25 கோடி என்னும் அதிக தொகை கொடுத்து, சென்னை அணி சேர்த்தது. ஆனால், ஒரு முறை கூட கவுதமுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து, தற்போதைய ஏலத்தில், கிருஷ்ணப்பா கவுதமை எடுத்து, ஆடும் லெவனில் சேர்ப்பது பற்றியும், லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

GAUTAMGAMBHIR, MSDHONI, CHENNAI-SUPER-KINGS, KRISHNAPPA GOWTHAM, LUCKNOW SUPER GIANTS, IPL AUCTION 2022, கிருஷ்ணப்பா கவுதம், கவுதம் கம்பீர், தோனி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்