‘இதுல இருந்தே தெரியுது விவரம் இல்லைனு’ ‘ஆன்லைன்ல ஆர்டர் பண்றேன்’.. பாகிஸ்தான் வீரருக்கு வித்தியாசமாக பதிலளித்த கம்பீர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகாஷ்மீர் தொடர்பாக குரல் கொடுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாஹித் அப்ரிடியின் கருத்துக்கு கம்பீர் ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சில தினங்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டது. இதனால் காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. வாரம் ஒருமுறை பாகிஸ்தான் காஷ்மீருக்கு ஆதரவு கரம் நீட்டுகிறது என்பதை தெரிவிக்கும் வகையில் செயல்படுமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை வைத்தார்.
இதனை அடுத்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சாஹித் அப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பிரதமர் இம்ரான்கான் சொன்னதை நினைவில் வைத்து செயல்படுவோம். இந்த வாரம் வெள்ளிக்கிழமை 12 மணியளவில் குறிப்பிட்ட பகுதியில் நான் இருப்பேன். வர நினைப்பவர்கள் என்னுடன் இணைந்து கொள்ளலாம்’ என பதிவிட்டிருந்தார். இந்நிலையலில் இதற்கு பதிலளிக்கு வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்த பதிவில் இருந்து அப்ரிடிக்கு விவரம் இல்லை என தெளிவாக தெரிகிறது. அதனால் ஆன்லைனில் குழந்தைகளுக்கான பாடத்தை வாங்கி தருகிறேன். உதவியாக இருக்கும்’ என அப்ரிடியின் பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அரை நிர்வாணமாக பேட்டிங்’.. புது போட்டோவை வெளியிட்ட சாரா டெய்லர்..!
- ‘சர்ச்சைக்குரிய கருத்து’... ‘பதிவிட்ட அதிபருக்கு’... ‘அதிர்ச்சியளித்த ட்விட்டர்’!
- ‘புது இடம், புது டீம்’.. அடுத்த இன்னிங்ஸ்ஸிக்கு ரெடியான சிஎஸ்கே ப்ளேயர்..!
- ‘7 ரன், 5 விக்கெட்’ ‘மிரள வைத்த பந்து வீச்சு’.. பவுலிங் சீக்ரெட்டை சொன்ன பும்ரா..!
- ‘டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்’.. முதல் இடத்தை பிடித்த அணி எது..?
- ‘புயல் வேகத்தில் பந்து வீசி ஸ்டம்பை பறக்க விட்ட பும்ரா’ ‘மிரண்டு போன வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்’.. வைரலாகும் வீடியோ..!
- ‘இந்திய கிரிக்கெட் வீரர் வீட்டில் திடீர் தீ விபத்து’.. ஜன்னலை உடைத்து மனைவி, குழந்தையை மீட்ட தீயணைப்பு படையினர்..!
- ‘95 நிமிஷம், 45 பந்து’.. ‘20 வருஷத்துக்கு பின்’ இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வித்தியாசமான சாதனை படைத்த வீரர்..!
- ‘தோனிய ரீப்ளேஸ் பண்ண இவர்தான் சரியான ப்ளேயர்’.. சேவாக் சொன்ன அந்த பிரபல வீரர்..?
- ‘அஸ்வின் விளையாடததுக்கு இதுதான் காரணம்’.. புது விளக்கம் கொடுத்த துணைக் கேப்டன்..!