ஓவரா ‘Zoom’ பண்ணா அப்படிதான் தெரியும்.. மொத்த டீமையும் பரபரப்பாக்கிய சம்பவம்.. கம்பீர் சொன்ன அட்வைஸ்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் நடப்பு கேப்டன் கே.எல்.ராகுல் அவுட் குறித்து கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி 202 ரன்கள் எடுத்தது. அதேபோல் தென் ஆப்பிரிக்கா அணி தங்களது முதல் இன்னிங்சில் 229 ரன்களை எடுத்தது.

இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி 266 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றி இலக்காக 240 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இப்போட்டியில் இந்திய அணி நடப்பு கேப்டன் கே.எல்.ராகுல் அவுட்டானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் நாள் ஆட்ட நேர இறுதியில் தென் ஆப்பிரிக்க வீரர் யான்சென் வீசிய ஓவரில் மார்க்கமிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்த அவுட்டில் திருப்தியடையாத கே.எல்.ராகுல், பந்து தரையில் பட்டதா? என அம்பயரிடம் கேட்டார்.

இதனை அடுத்து மூன்றாவது அவரிடம் ரிவியூ கேட்கப்பட்டது. அப்போதும் பந்து தரையில் பட்டதா என்பதை சரியாக முடிவு செய்ய முடியவில்லை. அதனால் மூன்றாம் அம்பயரும் அவுட் என அறிவித்தார். சந்தேகத்தின் அடிப்படையில் இந்த விக்கெட் தென் ஆப்பிரிக்காவுக்கு சாதகமாக அமைந்தது. இதனால் கே.எல்.ராகுல் கோபமாக பெவிலியன் திரும்பினார். இதன்காரணமாக மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர், ‘கேஎல் ராகுலின் விக்கெட்டை மீண்டும் மீண்டும் பார்க்கும் போது பந்து தரையில் படுவது போன்றுதான் தெரியும். அதுவும் அதிகமாக ஜூம் செய்து பார்த்தால் எந்த ஒரு பந்து  கேட்ச் பிடிக்கும் பொழுது கீழே பட்டது போன்றுதான் தெரியும். ஆனால் பந்தை சீரான வேகத்தில் பார்க்கும்போது விரலுக்கு மேல் தான் விழுந்தது என்பது தெரியும் வரும். இதுபோன்ற விக்கெட்டுகள் விழும் பொழுது அதிகமாக ஜூம் செய்து பார்க்கக் கூடாது. அப்படி பார்த்தால் எப்போதும் குழப்பம் தான் ஏற்படும்’ என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்