"ஜடேஜா இப்போ பண்ணது பெரிய விஷயமே இல்ல.. எதுவும் தெரியாம பேசாதீங்க.." கம்பீர் சொல்லும் விஷயம்.. பின்னணி என்ன?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கை அணிக்கு எதிரான டி 20 தொடரை இந்திய வென்று அசத்தியுள்ள நிலையில், அடுத்ததாக டெஸ்ட் தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

Advertising
>
Advertising

இரு அணிகளும் முதல் டெஸ்ட்டில் கடந்த நான்காம் தேதியன்று மோதியிருந்தது. மூன்றே நாளில் நடந்து முடிந்த இந்த டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

'ஆல் ரவுண்டர்' ரவீந்திர ஜடேஜா

இந்த போட்டியில், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா, முதல் இன்னிங்ஸில் 175 ரன்கள் அடித்து பல்வேறு சாதனைகளை அடித்து நொறுக்கி தன்வசப்படுத்திக் கொண்டார். அதே போல, இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் 9 விக்கெட்டுகள் எடுத்த ஜடேஜா, பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் பட்டையைக் கிளப்பி, ஆட்ட நாயகன் விருதினைத் தட்டிச் சென்றார்.

மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்த ஆல் ரவுண்டராக விளங்கி வரும் ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டத்திறனை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், ஜடேஜாவின் பேட்டிங் குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு மைதானங்கள்

'ஜடேஜா இந்தியாவில் இந்த ஸ்கோரை அடித்ததற்கு மிக முக்கிய காரணம், ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு மைதானங்களில் அவர் சிறப்பாக ஆடியிருந்தது தான். அங்கு அவர் இதை விட குறைந்த ரன்கள் அடித்திருந்தாலே, ஜடேஜாவுக்கு அது அதிக தன்னம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும்.இலங்கை அணிக்கு எதிரான போட்டியில், ஜடேஜா சதமடித்த பிறகு, தனஞ்சயா, அசலங்கா, எம்புல்டேனியா போன்றவர்களின் பந்து வீச்சினை தான் எதிர்கொண்டார். இவர்கள் யாரும் ஒருமுறை கூட ஜடேஜாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை.

யாரும் பேசமாட்டார்கள்

ஜடேஜா அடித்த 175 ரன்களை விட, ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து போன்ற மைதானங்களில், 40 முதல் 50 ரன்கள் அடித்திருந்தால், அது தான் சிறப்பான விஷயமாக இருக்கும். வெளிநாட்டு மைதானங்களில் ஜடேஜா ஆடியதன் மூலம் தான், தற்போது 175 ரன்களை அவரால் அடிக்க முடிந்தது. இந்த இன்னிங்ஸினை கொண்டாடும் யாரும், இதற்காக ஜடேஜா எந்த அளவுக்கு மெனக்கெட்டார் என்பது பற்றி பேசமாட்டார்கள்.

கிடைத்த வாய்ப்பு

வெளிநாட்டு மைதானங்களில் ஜடேஜாவின் சிறப்பான ஆட்டம் வெளிப்பட்டதால் தான், இப்போது அவரால் 175 ரன்கள் அடிக்க முடிந்தது. அதனால் தான் 7 ஆவது வீரராக இறங்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், ஜடேஜா ரன்கள் எடுக்கத் தவறி இருந்தால், 7 ஆவது இடத்தில் வேறு ஒரு வீரருக்கு கூட, அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்கி இருக்கலாம்.

இவ்வளவு ஏன், அஸ்வினுக்கு கூட ஒரு வேளை அந்த வாய்ப்பு கிடைத்திருக்கலாம். இதனால், வெளிநாட்டு மைதானங்களில் நீங்கள் ரன்கள் குவித்த பிறகு தான், உங்களின் டெஸ்ட் சாதனைகளை உயர்த்த வாய்ப்பு கிடைக்கும்" என கவுதம் கம்பீர் குறிப்பிட்டுள்ளார்.

RAVINDRA JADEJA, GAUTAM GAMBHIR, IND VS SL, ரவீந்திர ஜடேஜா, கவுதம் கம்பீர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்