'4 வருஷத்துக்கு அப்றம் வந்திருக்காரு... அவ்ளோ சீக்கிரம் நீங்க ஒதுக்கிட முடியுமா?'- கங்குலியை திகைக்க வைத்த 'அந்த' பவுலர் யார்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின். தற்போது இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிகம் விளையாடி வரும் அஷ்வின், சில வாரங்களுக்கு முன்னர் நடந்த டி20 உலகக் கோப்பையில் யாரும் எதிர்பாராத விதமாக இடம் பிடித்தார்.
சில ஆண்டுகளுக்குப் பின்னர் டி20 போட்டிகளில் அஷ்வின் கொடுத்த கம்-பேக் அது. மொத்தமாக அவர் மூன்று போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் மிக சாதூர்யமாக பயன்படுத்தி கவனம் பெற்றார் அஷ்வின். இதன் மூலம் அடுத்ததாக அவர் இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் களம் காண வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ‘ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அஷ்வின் இன்னும் நீண்ட காலம் விளையாட வாய்ப்பு உள்ளது. அவர் தவிர்க்க முடியாத வீரர்’ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ- யின் தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலியும், அஷ்வினுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். அவர், ‘நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையைப் பொறுத்தவரை இந்திய அணியில் அஷ்வின் இடம் பெற்றாக வேண்டும் என்பதில் விராட் கோலி உறுதியாக இருந்தார். சாஹல், குல்தீப் போன்றவர்களை விட்டுவிட்டு அஷ்வினை அணியில் எடுப்பது குறித்து எனக்கும் கூட சில மாறுபட்ட கருத்துகள் இருந்தன.
ஆனால், அவரது கம்-பேக்கில் கிடைத்த வாய்ப்புகள் அனைத்திலும் ஜொலித்தார். அவரைப் பற்றி எல்லோரும் நல்ல விதமாகத் தான் சொல்கிறார்கள். தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் கூட, இந்தியாவின் மிகச் சிறந்த வீரர் அவர் தான் என்கிறார்.
அவர் எத்தனை முறை ஐசிசி கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருக்கிறார் என்பதைப் பாருங்கள். 2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் அஷ்வின் இருந்தார். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராஃபியை வென்ற அணியிலும் அஷ்வின் இடம் பெற்று அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலராக உருவெடுத்தார். சிஎஸ்கே, ஐபிஎல் தொடர்களில் வென்ற போதெல்லாம் அவர் தான் அணியின் முக்கிய பந்து வீச்சாளராக இருந்தார். இப்படி அவர் சாதனைகள் ஏராளம்.
அவரது டெஸ்ட் போட்டிகளுக்கான ரெக்கார்டை பாருங்கள். அது அசாத்தியமானது. இதைப் போன்ற வீரர்களை உங்களால் தவிர்க்கவே முடியாது. உங்கள் கண்களை மூடிக் கொண்டு அப்படி ஒரு வீரரே இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. அவர் சாதனைகள் குறித்து எனக்கு எந்த வியப்பும் இல்லை’ என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
அடுத்ததாக இந்திய அணி, தென் ஆப்ரிக்கா சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட இருக்கிறது. இதில் டெஸ்ட் அணியில் மட்டும் அல்லாது, ஒருநாள் அணியிலும் அஷ்வின் இடம் பெறுவார் என்று ஆருடம் கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'என்னடா நடக்குது அங்க..?' கேப்டன் ஆகக் களமிறங்கும் ரோகித்… திடீர் லீவு போடும் கோலி..!
- ரஜினியோட அறிக்கையை கவனிச்சீங்களா.. வெங்கடேஷ் ஐயர் செம்ம ஹேப்பி!
- ‘திடீர்ன்னு இவருக்கு இப்டி ஆய்டுச்சே..!’- தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இருந்து விலக்கப்பட்ட ரோகித் சர்மா..!
- தொடர் கேப்டன்ஸி சர்ச்சைகள்... கோலி குறித்து மனம் திறந்த ரோகித் சர்மா..!
- நடுமைதானத்தில் ரஜினி ஸ்டைலில் கெத்தா… மாஸா… கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வெங்கடேஷ் ஐயர்!
- ‘கூல் ரோகித் கூல்… நோ டென்ஷன்…’- கேப்டன்ஷி குறித்து ரோகித் சர்மா என்ன சொல்றார்ன்னு பாருங்க..!
- 'இவர்' கைகளில் இந்திய அணி பத்ரமாகவே இருக்கும்..!- கம்பீருக்கு என்ன கோபம்… இப்படி பேசயிருக்காரே..!
- "கோலிகிட்ட நா பெர்சனலா கேட்டுக்கிட்டேன், ஆனா அவருதான்..."- கேப்டன்ஸி சர்ச்சைகளுக்கு நடுவே கங்குலி ஓப்பன் டாக்..!
- ‘காட்டுக்குள் ஹோட்டல்’!.. தென் ஆப்பிரிக்காவில் இந்திய வீரர்கள் தங்கப்போற இடம் இதுதானா..? அப்படி என்ன ஸ்பெஷல்..?
- ‘நாங்க சொன்னத கோலி கேக்கல… அதான்..!’- ‘கேப்டன்ஸி’ சர்ச்சைகளுக்கு நடுவில் கங்குலியின் புது விளக்கம்!