"அதுக்கு எல்லாம் வாய்ப்பில்ல ராஜா..." 'கங்குலி' எடுத்துள்ள முடிவால்... 'தோனி'யின் மாஸ்டர் பிளானுக்கு எழுந்துள்ள 'சிக்கல்'??!!... என்ன செய்யப் போறாரு 'தல'?
முகப்பு > செய்திகள் > விளையாட்டு13 ஆவது ஐபிஎல் சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த தொடரின் கடைசி லீக் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இந்த ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியுள்ள நிலையில், அடுத்த சீசனில் அணியில் பல மாற்றங்கள் செய்து களமிறங்க சென்னை அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னை அணியில் பல வயதான வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களை மாற்றி விட்டு அடுத்த ஆண்டு பல வீரர்களை புதிதாக அணியில் எடுக்க முடிவு செய்துள்ளது. அணியின் கோர் ஃகுரூப் ஒன்றை உருவாக்க போவதாக அணியின் கேப்டன் தோனி வெளிப்படையாக அறிவித்து விட்டார்.
இந்த முறை கொரோனா தொற்று காரணமாக, ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தாமதமாக ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெறும் என தகவல் பரவி வருகிறது.
அது மட்டுமில்லாமல், அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னர் ஏலம் நடைபெறும் என்பதைத் தான் சென்னை அணி மலை போல நம்பியுள்ளது. ஆனால், பிசிசிஐ தலைவர் கங்குலியின் சமீபத்திய பேட்டி அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கு முன் பெரிய அளவில் ஏலம் நடைபெறாது என்பதை உறுதி செய்யும் வகையில் உள்ளது.
அடுத்த வருட ஏலம் குறித்து எதுவும் ஆலோசனை செய்யவில்லை. அது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. முதலில் இந்த சீசனை பார்க்கலாம் என கங்குலி தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த ஆண்டிற்காக பெரிய அளவில் ஏலம் நடத்த வாய்ப்பில்லை என கங்குலி நினைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அடுத்த ஆண்டுத் தொடரை சாதாரணமாக நடத்தி விட்டு 2022 ஆம் ஆண்டு பெரிய அளவில் ஏலத்தை நடத்தவும் கங்குலி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், அதற்கு முன் பெரிய அளவில் ஏலம் நடைபெற வாய்ப்பில்லை.
இதனால், அடுத்த ஆண்டு அணியில் பெரிய மாற்றத்துடன் களமிறங்க காத்திருக்கும் சென்னை அணிக்கு ஏலம் பெரிதாக நடைபெறாமல் போனால் அது மிகப்பெரும் சிக்கலை ஏற்படுத்தும். குறைந்தபட்சம் 2 அல்லது 3 வீரர்கள் வேண்டுமானால் சென்னை அணியில் புதிதாக இடம்பெறலாம். மற்றபடி கேப்டன் தோனியின் கோர் ஃகுரூப் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் என்றே தெரிகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "அடுத்த ஐபிஎல் 'சீசன்'ல 'தோனி' ஆடுறதுக்கு முன்னாடி... கண்டிப்பா இத பண்ணியே ஆகணும்..." அறிவுரை சொன்ன 'கவாஸ்கர்'!!!
- #DefinitelyNot... இந்திய அளவில் 'டிரெண்ட்' ஆன வார்த்தைக்கு பின் இருந்த 'கேள்வி',,. "நான் கேட்க காரணமே இது தான்..." 'விளக்கம்' சொன்ன 'வர்ணனையாளர்'!!!
- 'தோனி' சொன்ன அந்த 'ரெண்டு' வார்த்தை... இதுக்குத் தான் 'தல' இவ்ளோ நாள் நாங்க வெயிட்டிங்.." 'ட்விட்டர்' டிரெண்டிங்கில் தூள் கிளப்பிய 'சிஎஸ்கே' 'ரசிகர்'கள்!!!
- Video : "'தோனி' 'ஐபிஎல்' போட்டிலயும் 'retired' ஆகப் போறாரு??..." பரபரப்பை கிளப்பிய பல்வேறு 'யூகங்களுக்கு' மத்தியல்... 'தல' சொன்ன 'கூல்' பதில்!!!
- பிசிசிஐ-யின் இந்திய அணி அறிவிப்புக்கும்... MI vs RCB மேட்ச்சுக்கும்... நடுவுல ஒரு 'தரமான சம்பவம்' நடந்திருக்கு!.. மன உளைச்சலில் கோலி... 'சகுனி'யாக மாறிய சூர்யகுமார்!?.. அதிர்ச்சி தகவல்!
- அடுத்த ரவுண்டுக்கு சென்ற 'சூர்யகுமார்' விவகாரம்... "'ஆண்டவா', இதுக்கு ஒரு எண்டே இல்லையா??..." எகிறும் 'பரபரப்பு'!!!
- Video : "அன்னைக்கி தூரத்துல இருந்து 'தல' 'பேட்டிங்'க பாத்தேன்... இன்னைக்கி இவ்ளோ பக்கத்துல..." றெக்க கட்டிப் பறந்த 'வருண்',,... வைரல் 'வீடியோ'!!!
- "அவரு பேசுனாலே குப்பை தான்... வேற வேலையே இல்ல அவருக்கு..." 'முன்னாள்' வீரர்களால் வெடித்த 'சர்ச்சை'!!!
- 'நம்ம கைய வச்சே... நம்ம கண்ண குத்த பாக்குறாங்க!'.. கோலி எதிர்பார்க்காத ட்விஸ்ட்!.. உஷாரன ஆஸ்திரேலிய அணி... இந்தியாவுக்கு கொடுத்த ஷாக்!
- IPL2020: ‘இப்படியா ஒரண்ட இழுத்துக்குவீங்க?!’.. RCBvsMI மேட்சில் முட்டிக்கொண்ட வீரர்கள்! கோபப்பட்டு பிசிசிஐ எடுக்கும் அதிரடி ‘நடவடிக்கை!’