'அதெல்லாம்' ஒரு மேட்ச் கூட ஆடக்கூடாது... 'முன்னணி' வீரருக்கு நோ சொன்ன கங்குலி... இதெல்லாம் 'நல்லா' இல்ல!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுரஞ்சிக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வருகின்ற 9-ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது. இதில் சவுராஷ்டிரா அணியும், பெங்கால் அணியும் மோதவுள்ளன. இரு அணிகளும் பலம் வாய்ந்தவை என்பதால் இந்த இறுதிப்போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சவுராஷ்டிரா அணியின் வலிமையை அதிகரிக்கும் பொருட்டு ஜடேஜாவை அந்த அணிக்கு விளையாட வைக்க மாநில கிரிக்கெட் வாரியம் பிசிசிஐயிடம் ஒப்புதல் கேட்டுள்ளது. பதிலுக்கு கங்குலி அதெல்லாம் முடியாது என திட்டவட்டமாக மறுத்து விட்டாராம்.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் தொடர் வருகின்ற மார்ச் 12-ம் தேதி தொடங்கவுள்ளது. இதில் ஜடேஜாவை ஆடும் லெவன் அணியில் சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டு இருக்கிறதாம். இதனால் தான் கங்குலியே நேரடியாக இதற்கு பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதற்கு சவுராஷ்டிரா கிரிக்கெட் அமைப்பின் மாநில தலைவர் ஜெயதேவ் ஷா ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டியின் போது ஏன் சர்வதேச போட்டி நடத்துகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மேலும் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்போது இந்திய அணி எந்தவித சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்காமல் பார்த்து கொள்கிறீர்கள்? ஐபிஎல்லுக்கு ஒரு நியாயம்? ரஞ்சிக்கோப்பைக்கு ஒரு நியாயமா? எனவும் அவர் விமர்சனம் செய்துள்ளார். தொடர்ந்து முன்னணி வீரர்கள் ஆடினால் தான் இந்தத்தொடர் மக்கள் மத்தியில் சென்றடையும் என்றும் தன்னுடைய தரப்பு நியாயத்தை அவர் எடுத்துரைத்து இருக்கிறார்.
இன்று இந்திய அணியின் தலைசிறந்த வீரர்கள் பலரும் ரஞ்சிக்கோப்பை போட்டிகளில் ஆடி இந்திய அணியில் இடம் பிடித்தவர்கள் என்பதை மறுக்க முடியாது. அதே நேரம் சவுராஷ்டிரா அணிக்காக புஜாராவும், பெங்கால் அணிக்காக விருத்திமான் சஹாவும் ஆடவிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'புடவையுடன்' கிரிக்கெட் ஆடிய 'மிதாலிராஜ்'... 'மகளிர்' தினத்தை முன்னிட்டு கலக்கல் 'காம்போ'... 'ரசிர்களை' கவர்ந்த 'வைரல்' வீடியோ...
- 'அவரோட' காயத்துக்கு காரணம் நீங்க தான்... பிசிசிஐ 'அதிரடி' குற்றச்சாட்டு... சிக்கிக்கொண்ட மூத்த வீரர்?
- Video: எப்டி போனேனோ 'அப்டியே' வந்துட்டேன்... 21 வருட ரெக்கார்டை 'உடைத்தெறிந்த' வீரர்... கப்பு நமக்குத்தான் ஜி 'குதூகலிக்கும்' பிரபல அணி!
- உலகின் 'தலைசிறந்த' வீரரை விட்டுட்டு... அவருக்கு ஏன் 'சான்ஸ்' குடுத்தோம்னா?... ரகசியம் 'உடைத்த' கேப்டன்!
- அவங்க 3 பேருக்கும் 'வயசு' ஆகிடுச்சு அதனால... அதிரடி திட்டம் குறித்து 'ஓபனாக' பேசிய கேப்டன்... 'யார' சொல்றாருன்னு பாருங்க!
- ‘இந்தியா வரட்டும் இருக்கு’... ‘எனக்கு சிரிப்பு தான் வருது’... ‘கடுப்பான’ கோலியை ‘சீண்டிய’ பிரபல வீரர்...
- இனி 'உங்களுக்கெல்லாம்' இதுவே போதும்... 'பிசிசிஐ' எடுத்த திடீர் முடிவு... ஏன் இப்டி? ஷாக்கான அணிகள்!
- #WATCH #VIDEO: ‘வெறித்தனமான ஆட்டத்தால்’... 37 பந்துகளில் செஞ்சுரி’... ‘சிக்சர்களாக விளாசித் தள்ளி'... ‘அதிரடி காட்டிய இளம் ஆல் ரவுண்டர்’!
- ‘உங்க பையன ஒழுங்குபடுத்துங்க, இல்லன்னா’... அடுத்தடுத்து ‘சர்ச்சையில்’ சிக்கிய ‘பிரபல’ வீரர்... ‘எச்சரிக்கை’ விடுத்த முன்னாள் ‘கேப்டன்’...
- 'நம்பி' எறக்கி விட்டதுக்கு... நல்லா வச்சு 'செஞ்சிட்டீங்க' ராசா... முன்னணி வீரரால் 'கடுப்பான' ரசிகர்கள்!