இந்த வாகனுக்கு நம்மகிட்ட வம்பிழுக்கிறதே வேலையா போச்சு..! இந்தியாவை பாராட்டி ‘ட்வீட்’ போட்ட கங்குலி.. உடனே என்ன சொல்லிருக்காரு பாருங்க..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியை பாராட்டி கங்குலி பதிவிட்ட ட்வீட்டுக்கு மைக்கேல் வாகன் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 191 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 466 ரன்களும் எடுத்தது. அதேபோல் இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 290 ரன்களை எடுத்தது. அதனால் இங்கிலாந்துக்கு வெற்றி பெற 368 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி விளையாடிய இங்கிலாந்து அணி 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனால் 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்று வருகிறது. ஓவல் டெஸ்ட்டில் பெற்ற வெற்றிக்காக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்திய அணியை பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, இந்திய அணியைப் பாராட்டி ட்வீட் செய்திருந்தார். அதில், ‘சிறப்பான ஆட்டம். திறமை தான் இரு அணிகளையும் வேறுபடுத்திக் காட்டியுள்ளது. கடினமான நேரங்களில் நன்றாக விளையாடியதுதான் வேறுபாடாக உள்ளது. மற்ற நாடுகளை விடவும் தரத்தில் இந்திய கிரிக்கெட் அணி முன்னேறியுள்ளது’ என பதிவிட்டிருந்தார்.

இதற்கு கமெண்ட் செய்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன், ‘இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் தான் அப்படி உள்ளது. ஆனால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் (ஒருநாள், டி20) அப்படி இல்லை’ என கங்குலியின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்திருந்தார். மைக்கேல் வாகன் தொடர்ந்து இந்திய அணியை விமர்சனம் செய்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்