‘என்னது டிராவிட் வீட்டிலிருந்து வந்த போன் கால் தான் காரணமா?’- என்ன சொல்றீங்க கங்குலி?- டிராவிட் புது கோச் ஆனது எப்படி?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு உள்ளார். ஆனால், டிராவிட்டிடம் அந்த முடிவை அறிவிப்பதற்கு முன்னர் அவரது வீட்டிலிருந்து வந்த ஒரு போன் கால் குறித்த நினைவை வேடிக்கையாகப் பகிர்ந்துள்ளார் பிசிசிஐ (BCCI) தலைவர் சவுரவ் கங்குலி.

Advertising
>
Advertising

சமீபத்தில் இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளர் ஆக ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலக்கோப்பைத் தொடர் உடன் நிறைவடைந்துள்ளது. இதற்கு ஒரு வாரத்துக்கு முன்னரே இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் ஆக ராகுல் டிராவிட் தனது பணியைத் தொடங்குவார் என அறிவிக்கப்பட்டது. வருகிற நியூசிலாந்துக்கு எதிரான போட்டித் தொடர் முதல் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான பயிற்சியாளர் ஆக டிராவிட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சூழலில் டிராவிட்டை எப்போது இந்திய அணியின் பயிற்சியாளர் ஆக அழைக்க வேண்டும் என தனக்குத் தோன்றியது என்பது குறித்த நினைவை வேடிக்கையுடன் பகிர்ந்துள்ளார் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி. கங்குலி கூறுகையில், “ஒரு நாள் ராகுல் டிராவிட் மகனிடம் இருந்து எனக்கு ஒரு போன் கால் வந்தது. தனது அப்பா தன்னிடம் மிகவும் ஸ்ட்ரிக்ட் ஆக இருக்கிறார் என்றும் அவரை எங்கேயாவது கிளப்ப வேண்டும் என்றும் சொன்னான். அப்போதுதான் டிராவிட்டிடன் நான் போன் செய்து நீ நமது தேசிய அணியில் இணைவதற்கான காலம் வந்துவிட்டது எனச் சொன்னேன்” என்றார் வேடிக்கையுடன்.

மேலும் கங்குலி, “நானும் டிராவிட்டும் ஒன்றாகவே வளர்ந்தோம். ஒரே நேரத்தில் எங்கள் பயணத்தைத் தொடங்கி அதிகப்படியான நேரம் ஒன்றாகவே இணைந்து விளையாடி வருகிறோம். அதனால் ராகுலை எங்கள் உடன் இணைத்துக்கொண்டு அவரை இயல்பாக வைத்திருக்க எங்களால் முடிகிறது. கிரிக்கெட்டுக்கான மிகச்சிறந்த தூதுவர் டிராவிட் என்றே கூறுவேன்” என டிராவிட்டை புகழ்ந்து உள்ளார்.

இந்திய அணியின் புதிய கோச் ஆக நியமிக்கப்பட்டது குறித்து டிராவிட் சொன்னதை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில், “NCA, U-19, இந்தியா ஏ அணிகளில் இணைந்து பணியாற்றிய வீரர்கள் உடன் தான் மீண்டும் இணைந்துள்ளேன். ஒவ்வொரு நாளும் மெருகேற வேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் அவர்களிடம் இருக்கிறது. அடுத்த இரண்டுகளில் நிறைய போட்டிகள் வருகின்றன. அனைத்து வீரர்கள் மற்றும் உதவியாளர்கள் உடன் இணைந்து சிறப்பாக விளையாடுவதற்குத் துணை புரிவேன்” என ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

SOURAVGANGULY, RAHUL DRAVID, BCCI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்