அவங்க ‘ரெண்டு’ பேர்தான் இந்திய அணியோட மிகப்பெரிய சொத்து.. கங்குலி கை காட்டிய அந்த 2 வீரர்கள் யார்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் மிகப்பெரிய சொத்து என இரு வீரர்களை குறிப்பிட்டு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ட்வீட் செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. அதில் நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியின் வெற்றிக்கு இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களான ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரவீந்தர ஜடேஜா முக்கிய காரணமாக அமைந்தனர்.

நேற்றைய போட்டியில் இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது, ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்ட்யா-ஜடேஜா கூட்டணி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்தது. இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 300-ஐ தாண்டியது. இதில் ஹர்திக் பாண்ட்யா 92 ரன்களிலும், ஜடேஜா 66 ரன்களிலும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, ‘ஒருநாள் தொடரை இழந்ததற்கு மத்தியில் இது ஒரு நல்ல வெற்றி. இன்னும் டி20 மற்றும் டெஸ்ட் தொடர்கள் இருப்பதால் இந்தியாவுக்கு சாதகமான சூழல் விரைவில் வரும் என நம்புகிறோம். ஆல்ரவுண்டர்களான ஜடஜேவும், ஹர்திக் பாண்டியாவும் இந்திய அணியின் மிகப்பெரிய சொத்து. கடினமான சூழலிலும் சிறப்பான விளையாடுகிறார்கள்’ என அவர் பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்