அச்சுறுத்தும் ‘ஓமிக்ரான்’ வைரஸ்.. சவுரவ் கங்குலி சொன்ன ‘முக்கிய’ தகவல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஓமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தலால் தென் ஆப்பிரிக்கா தொடர் நடைபெறுமா என சந்தேகம் எழுந்த நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விளக்கம் கொடுத்துள்ளார்

Advertising
>
Advertising

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது.

இதனை அடுத்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கான்பூர் மைதானத்தில் நடந்த முடிந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 3-ம் தேதி மும்பையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.

இந்த தொடர் முடிவடைந்ததும் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதன்படி டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு இந்தியா செல்ல உள்ளது.

இதனிடையே தென் ஆப்பிரிக்கா நாட்டில் தற்போது ஓமிக்ரான் வகை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த உருமாறிய ஓமிக்ரான் வகை வைரஸ் தீவிரமாக பரவுவதால், இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ‘தற்போது உள்ள சூழ்நிலையில் படி இந்தியா-தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் திட்டமிட்டபடியே உள்ளது. டிசம்பர் 17-ம் தேதிதான் அங்கு முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. அதனால் அதுகுறித்து யோசிக்க இன்னும் நிறைய நேரம் உள்ளது. என்ன இருந்தாலும் வீரர்களின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம். அதனால் மத்திய அரசிடம் இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’ என சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

BCCI, SOURAVGANGULY, INDVSA, OMICRON

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்