அவர் ஒண்ணும் 'மெஷின்' கிடையாது... 'மனுஷன்' தான் சரியா...? புகழ், மரியாதை கிடைச்சாலும் அது எவ்ளோ 'கஷ்டம்' தெரியுமா...? இந்திய வீரருக்கு 'சப்போர்ட்' செய்த கங்குலி...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாகவும் பதவி வகித்து வந்தார். ஐபிஎல் தொடரின் போது விராட் அளித்த ஒரு அறிக்கையில் அவர் டி20 உலகக் கோப்பை போட்டி முடிந்தபின், டி-20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக இருப்பதாக தெரிவித்தார்.

விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது பல்வேறு ஒருநாள், டி-20, டெஸ்ட் தொடர்களை வென்றிருந்தாலும், ஐசிசி சார்பில் எந்தக் கோப்பையையும் வெல்ல முடியவில்லை. இது குறித்து பலர் விராட் கோலியை விமர்சித்தும் உள்ளனர். மேலும் பிசிசிஐ-யும் விராட்டிற்கு அழுத்தம் கொடுத்தது என்ற செய்தியெல்லாம் வெளிவந்தது.

அதனடிப்படையில் தான் விராட் கேப்டன் பதவியிலிருந்து விலகியிருக்கலாம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் பிசிசிஐ தலைவரான சவுரவ் கங்குலி தனியார் சேனல் நடத்திய நிகழ்ச்சியில் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகியது குறித்தான கேள்வி ஒன்றிற்கு பதிலளித்து உள்ளார்.

அதில், 'எங்களுக்கு விராட் கேப்டன் பதவியிலிருந்து விலகியதில் எந்தவிதமான அதிர்ச்சியும், வியப்பும் இல்லை. இங்கிலாந்து தொடர் முடிந்த பின்பிருந்தே இதுபற்றிப் பேசப்பட்டது. அவர் அப்போதே இந்த முடிவு குறித்துப் பேசிவிட்டார்.

இதுவரை பிசிசிஐ தரப்பில் இருந்து விராட்டிற்கு எவ்விதமான அழுத்தமோ அல்லது நெருக்கடியோ கொடுக்கவில்லை. நானும் ஒரு வீரராக இருந்திருக்கிறேன், நான் ஒருபோதும் இதுபோன்ற காரியங்களை செய்யமாட்டேன்.

விராட் முன்பை விட அதிக கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறார். இது அவருக்கு மிகுந்த கடினமாக இருக்கும். 3 பிரிவுகளுக்கும் ஒரு வீரர் கேப்டனாகத் தொடர்வது கடினமானது.

நான் 5 ஆண்டுகள் கேப்டனாக இருந்திருக்கிறேன். வெளியிலிருந்து பார்ப்போருக்கு கேப்டன் பதவி என்பது  தேசிய அணியை வழிநடத்திச் செல்கிறோம் எனத் தெரியும். ஏராளமான புகழ், மரியாதை கிடைக்கும். ஆனால், உள்ளார்ந்து பார்த்தால், கேப்டனுக்கு ஏராளமான மன அழுத்தம், உடல்ரீதியான உளைச்சல், பிரச்சனை இருக்கும்.

இதுபோன்ற பிரச்சனைகளை தோனியும் சந்தித்துள்ளார். இப்போது, விராட்டிற்கு உள்ளது. இனி இந்திய அணியின் கேப்டனாக வருவோருக்கும் இந்தச் சிக்கல் ஏற்படும்.

விராட் இந்தியாவிற்காக 13 ஆண்டுகள் விளையாடி ஒரு சிறந்த வீரர் என பெயர் பெற்றுள்ளார். ஒவ்வொரு வீரருக்கும் ஒரு மோசமான காலம் வரத்தான் செய்யும். விராட்டும் நம் அனைவரையும் போல மனிதர்தானே, எந்திரம் கிடையாது. அவரும் களத்தில் கால்களை நகர்த்தி, உடலை அசைத்து விளையாட வேண்டுமே.

இனி வரும் காலங்களில் பழைய விராட் கோலியைப் பார்ப்பீர்கள். அதுவரை பொறுத்திருங்கள்.' எனக் கூறியுள்ளார் கங்குலி.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்