'ரிஷப் பண்ட்-க்கு எப்படி கொரோனா வந்துச்சு'?.. 'பிசிசிஐ சறுக்கியது எங்கே'?.. ஒரே வரியில் அனைவரையும் ஆஃப் செய்த கங்குலி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ரிஷப் பண்ட்-க்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறித்து கங்குலி வியப்பூட்டும் கருத்தை தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தோல்விக்கு பிறகு, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி வீரர்கள் அங்கேயே தங்கியுள்ளனர். 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.

இதற்கிடையே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியும், இங்கிலாந்து தொடருக்கு கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் மீதம் இருந்ததால், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்களுக்கு 10 நாட்கள் பிரேக் கொடுக்கப்பட்டது. இந்த 10 நாள் விடுமுறையில், இங்கிலாந்தில் பல இடங்களை குடும்பத்துடன் சுற்றிப் பார்க்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், 2 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த இரு வீரர்களில் ஒருவர், ரிஷப் பண்ட் என்பது பின்னர் தெரிய வந்தது. அவர் யூரோ கோப்பை கால்பந்து போட்டியை நேரில் சென்று பார்த்து வந்த பிறகு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இப்போது தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் பண்ட், வரும் 18ம் தேதி டுர்ஹாம் செல்லும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியுடன் பயணிக்க மட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்திய அணியின் throwdown specialist தயானந்த கராணி என்பவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடன் நெருக்கமாக இருந்த பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண் உட்பட மூன்று நிர்வாகிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், அவர்களும் வரும் 18ம் தேதி இந்திய அணியின் பயோ-பபுளில் இணையமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், இதுகுறித்து நியூஸ் 18 ஊடகத்துக்கு பேட்டியளித்த பிசிசிஐ தலைவர் கங்குலி, "இங்கிலாந்தில் கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, யூரோ மற்றும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளுக்கு கூட்டம் கூட அனுமதிக்கப்பட்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, இந்திய வீரர்கள் விடுமுறையில் இருந்தனர். எந்த நேரமும் அவர்கள் மாஸ்க்குடன் இருப்பது நடைமுறையில் சாத்தியமில்லை" என்று ரிஷப் பண்ட்-க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்