“இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் இவர்தானா?”... பிரபல வீரரின் பதில்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக கோப்பை தொடருக்கு பின் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகிறார் என்று பரவிய தகவலுக்கு முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கங்குலி விளக்கமளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவுள்ள ரவிசாஸ்திரியின் பதவி காலம் வருகின்ற 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் முடிவுபெறுகிறது. இதற்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை நியமிக்க வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறுகையில் ரிக்கி பாண்டிங் இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராவது குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும். இந்நிலையில், அவர் ஒர் ஆண்டுக்கு அவர் குடும்பத்தை விட்டு விலகியிருக்க வேண்டும். எனவே இதுகுறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும். மேலும், அந்த பதவிக்கு அவர் சரியான நபர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கங்குலி கூறியுள்ளார்.

இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராகவுள்ளார். மேலும் இவருடைய வழிகாட்டுதலால்தான் 6 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது என பலரும் பாண்டிங்கை பாராட்டி வருகின்றனர்.

SOURAVGANGULY, CRICKET, RICKY PONTING, INDIAN TEAM, NEW COACH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்