நீங்க 'அவர' அந்த மாதிரி கூப்பிட்டது இந்தியாவுக்கு செஞ்ச 'பச்சை' துரோகம்...! - சித்துவை வெளுத்து வாங்கிய கம்பீர்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்பில் இருப்பவர் திரு.நவ்ஜோத் சிங் சித்து. இவர் நேற்று முன்தினம் (20-11-2021) பாகிஸ்தானின் கர்தார்பூரில் அமைந்திருக்கும் குருத்வாரா புனிதத்தலத்துக்கு வழிபாடு செய்யச் சென்றுள்ளார்.

Advertising
>
Advertising

அப்போது நவ்ஜோத் சிங் சித்துவுக்கு, அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் சார்பில் உயர் அதிகாரிகள் வரவேற்பு அளித்துள்ளனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

பொதுவாக இந்தியாவில் இருந்து அரசியல் ரீதியாக செல்லும் போது மட்டும் அளிக்கப்படும் உயர் அதிகாரிகளின் வரவேற்பு காங்கிரஸ் கட்சி தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு அளிக்கப்பட்டது.

முக்கியமான விஷயம் என்னவென்றால் குருத்வாராவில் தனது வழிபாட்டை முடித்துக்கொண்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய நவ்ஜோத் சிங் சித்து, 'பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் என் பெரியண்ணன்' என கூறியுள்ளார்.

இந்த சம்பவம் புகையும் அடுப்பில் மண்ணேணெய் ஊற்றியது போல தற்போது இந்திய அரசியல் சூழலில் சர்ச்சையை ஏற்படுத்தியது. நவ்ஜோத் சிங் சித்துவின் இந்த செயலுக்கு காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர், நவ்ஜோத் சிங் சித்துவின் வார்த்தைகளை கடுமையாக சாடியுள்ளார்.

'பாகிஸ்தான் ராணுவ தளபதி பாஜ்வாவை கட்டிப்பிடித்து, கர்தார்பூர் சாஹிப் சென்று இம்ரான் கானை பெரிய அண்ணன் என்று அழைக்கிறார் சித்து. இது இந்தியாவிற்கு அவர் செய்யும் துரோகம்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் காஷ்மீரில் 40 பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து சித்து வாயை திறந்து ஒரு கருத்தைக் கூட சொல்லவில்லை.

சித்து முதலில் தனது பிள்ளைகளை எல்லைக்கு அனுப்ப வேண்டும். அப்போது தான் அவருக்கு களநிலவரம் தெரியும், அவர் இம்ரான் கானை தனது பெரிய அண்ணன் என்று அழைத்திருப்பதை விட வெட்கக்கேடான கருத்து சித்துவிடம் இருக்க முடியாது' என்றார்.

GAMBHIR, SIDHU, IMRAN KHAN, ELDER BROTHER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்