'இவங்கள' மட்டும் 'டீம்'ல வச்சுகோங்க...! 'சிஎஸ்கே அணியில் யாரெல்லாம் continue பண்ணலாம் என...' - ரொம்ப 'ஓப்பனா' சொன்ன முன்னாள் வீரர்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

2022-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் யார் யாரையெல்லாம் தக்க வைத்து கொள்ளவேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

'இவங்கள' மட்டும் 'டீம்'ல வச்சுகோங்க...! 'சிஎஸ்கே அணியில் யாரெல்லாம் continue பண்ணலாம் என...' - ரொம்ப 'ஓப்பனா' சொன்ன முன்னாள் வீரர்...!

2021-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சாம்பியன் பட்டத்தை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டி 14-வது சீசனாக நடைபெற்று வந்ததில் சென்னை இதுவரை 4 சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது. அதோடு, வரும் 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இரு சென்னை அணியில் சேர்க்கப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Gambhir says whoever csk players are continue to play

இந்நிலையில் ஐபிஎல் தொடர் குறித்து தன் கருத்துக்களை கூறும் முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யார் யாரை தக்க வைக்க வேண்டும் என்பது குறித்தான தனது கருத்தையும் வெளியிட்டுள்ளார்.

Gambhir says whoever csk players are continue to play

'2021ஆம் ஆண்டு கூறுதலாக இரு அணி இணைய உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த வருடம் கண்டிப்பாக டூபிளசிஸ், ஜடேஜா மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோரை தக்க வைத்து கொள்ள வேண்டியது அவசியம்' என தெரிவித்துள்ளார்.

பொதுவாகவே ஐபிஎல் போட்டி நடைபெறும் முன் நடத்தப்படும் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் வெறும் 3- 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டு மற்றவர்களை விடுவித்துவிட வேண்டும். இதற்காகவே கவுதம் கம்பீர் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்