விராட் கோலியோட வெற்றிக்கு காரணம் 'இது' தான்...! 'இந்த விஷயம்னால தான் அவர் தனியா தெரியுறார்...' கவுதம் கம்பீர் புகழாரம்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகோலி கிரிக்கெட்டில் இவ்வளவு தூரம் உச்சத்தை அடைந்ததற்கு அவரது உடற்கட்டு தான் காரணம் என முன்னாள் வீரர் கம்பீர் தெரிவித்துள்ள செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் தற்போதைய கேப்டனான விராட் கோலியைப் பற்றி, இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் கம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார்.
விராட் கோலிக்கு விண்டீஸ் வீரர் கெய்ல் போல வலிமையான உடல் கிடையாது. தென் ஆப்ரிக்காவின் காலிஸ், விண்டீசின் பிரையன் லாரா போலவும் கிடையாது. தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் போல, மைதானத்தில் நான்கு புறங்களில் பந்துகளை விளாசும் திறமை இல்லை. ஆனால் விராட் இந்த அளவு இந்திய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உச்சம் பெறுவதற்கு காரணம் அவர் பின்பற்றும் உடற்பயிற்சி.
அவரது உடலை மிக சரியான மற்றும் சிறப்பான முறையில் பராமரித்து வருகிறார். அதுதான் விராட்டின் மூலதனம். கிரிக்கெட் மைதானத்தில் கோலி ரன்கள் எடுக்க ஓடுவது அசத்தலாக இருக்கும், பெரும்பாலான வீரர்கள் இப்படிச் செய்வது இல்லை.
அதுமட்டுமில்லாமல் அவரோடு களமிறங்கும் ஆட்டக்காரர்களையும் பந்துகளை எதிர்கொள்ளும் வகையில் வாய்ப்பை கொடுத்து விளையாடுவதில் வல்லவர். இது அவரின் திறமையையும், மதிப்பையும் மற்றவர்களிடம் இருந்து கோலியை வேறுபடுத்தி காட்டுகிறது.
ஒருநாள் போட்டிகளில் அடித்து ஆடும் விராட், 'டுவென்டி-20' கிரிக்கெட்டையும் துவம்சம் செய்கிறார். 82 சர்வதேச 'டுவென்டி-20' போட்டியில் 2,794 ரன்கள் எடுத்துள்ள இவரது சராசரி ரன் குவிப்பு 50.8 ஆக உள்ளது என முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்