திறமை இருந்தும் 'ஏன்' தோக்குறாங்க...? அதுக்கு 'ஒரு விஷயம்' தேவைப்படுது...! 'அது நம்ம ஆளுங்க கிட்ட சுத்தமா இல்ல...' - தொடர் தோல்விக்கு முன்னாள் வீரர் கூறும் 'ஒரே' காரணம்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியில் திறமையான வீரர்கள் இருந்தும் அவர்களுக்கு தேவைபடும் முக்கியமான ஒன்று இல்லை என தனது மனகுமுறலை வெளிப்படுத்தியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர்.

Advertising
>
Advertising

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் இந்தியா மோதிய போட்டியிலும் இந்திய அணி படு தோல்வியை சந்தித்தது. முதல் போட்டி தானே இரண்டாவது போட்டியில் 'back to form' வந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் நேற்று நடந்த போட்டியிலும் இந்தியா சென்ற போட்டியை விட மோசமான ஆட்டத்தை ஆடியது என்று தான் சொல்லவேண்டும்.

முதல் ஓவரில் இருந்தே பதட்டத்துடன் விளையாடிய இந்திய அணி அடுத்தடுத்த விக்கெட்களை லட்டு கொடுப்பது போல நியூசிலாந்து அணிக்கு கொடுத்தது. ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் களத்தில் சிறிது நேரம் இருந்தாலும் ரன்கள் ஏறிய பாடில்லை.

இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு வெறும் 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால், அடுத்ததாக களமிறங்கிய நியூசிலாந்து அணி 14.3 ஓவரிலேயே இந்தியா நிர்ணயம் செய்த 110 ரன்களை எடுத்தது. இப்போது இந்திய அணி அரை இறுதி சுற்றிற்கு செல்லுமா என்ற சந்தேகமே எழுந்துள்ளது.

இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் போது இந்திய அணியிடம் இல்லாத ஒன்றை குறித்து கூறியுள்ளார்.

அதில், 'எந்த ஒரு போட்டியிலும் வெற்றி பெற மிக முக்கியமானது திறமை. ஆனால் அதைவிட முக்கியமான ஒன்றும் உள்ளது. இந்திய அணியில் திறமையான வீரர்கள் உள்ளனர். திறமையான வீரர்கள் இருந்தும் இந்தியா கடந்த சில போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதற்கு காரணம் வீரர்களிடையே மன வலிமை இல்லாதது தான். கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற போட்டியில் எந்த தவறும் செய்ய கூடாது. ஆனால் எதை செய்யக்கூடாதோ இந்திய அணி அதை செய்துவிட்டது.

இந்திய அணி மிகச் சிறந்த அணி தான், அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது ஆனால் ஐசிசியால் நடத்தப்படும் முக்கியமான போட்டிகளில் இந்திய அணி வழக்கம்போல் கோட்டை விட்டுவிடுகிறது' என தெரிவித்துள்ளார்.

GAMBHIR, T20, CRICKET, MENTAL STRENGTH, INDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்