2011 உலக கோப்பை ரகசியம்.. "தோனி என்கிட்ட சொன்ன வார்த்தை".. கம்பீர் Open டாக்.. "சும்மாவா கூல் கேப்டன்னு சொன்னாங்க"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணி 2011 ஆம் ஆண்டு, ஒரு நாள் கிரிக்கெட் தொடர் உலக கோப்பையை கைப்பற்றியதை அவ்வளவு எளிதில் ரசிகர்களால் மறந்து விட முடியாது.

Advertising
>
Advertising

Also Read | காதலனுடன் தனிமையில் இருந்த இளம் பெண் ... சற்றும் எதிர்பாராதபோது செய்த நடுங்கவைக்கும் சம்பவம்..!

தோனி தலைமையில் ஏற்கனவே 2007 ஆம் ஆண்டு டி 20 உலக கோப்பையை கைப்பற்றி இருந்த இந்திய கிரிக்கெட் அணி, 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பைத் தொடரிலும் களமிறங்கி இருந்தது. சச்சின், சேவாக், கம்பீர், யுவராஜ் சிங் உள்ளிட்ட வீரர்களும் இடம்பெற்றிருந்தனர்.

இந்த தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணியை எதிர்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி, அசத்தலாக பந்து வீசி இருந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய போது சச்சின், சேவாக் உள்ளிட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த சூழலில், கம்பீர், கோலி மற்றும் தோனி ஆகியோரின் உதவியுடன் இந்திய அணி இலக்கை எட்டி இருந்தது.

அதிலும் தோனி அடித்த அந்த கடைசி சிக்ஸர் ஷாட், இப்போது பார்த்தாலும் ஒரு வித Goosebump-ஐ நம்மில் கடத்தி செல்லும். இந்த போட்டியில் போராடிய கம்பீர் 97 ரன்களும், தோனி 91 ரன்களும் எடுத்திருந்தனர். 28 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்று ஒரு நாள் உலக கோப்பையை கைப்பற்றியதை ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி இருந்தனர்.

இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றி சுமார் 12 ஆண்டுகள் ஆக போகும் நிலையில், தொடர்ந்து இந்த உலக கோப்பையையை வென்றது குறித்து நிறைய தகவல் வெளி வந்த வண்ணம் உள்ளது.

அப்படி ஒரு சூழலில், தோனி குறித்து தற்போது கவுதம் கம்பீர் தெரிவித்துள்ள விஷயம், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. உலக கோப்பை போட்டியின் போது தோனி தன்னிடம் கூறியதை நினைவுகூர்ந்த கம்பீர், "தோனி எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். ஏனென்றால் நான் 100 ரன்கள் அடிக்க வேண்டும் என அவர் விரும்பினார். அவர் எப்போதும் நான் சதமடிக்க வேண்டும் என நினைப்பார். போட்டியின் போது 'அவசரப்பட வேண்டாம். நேரம் எடுத்து கொண்டு சதம் அடியுங்கள். தேவைப்பட்டால் நான் அடித்து ஆடி ரன் சேர்க்கிறேன்' என என்னிடம் கூறினார்" என்று கம்பீர் தற்போது மனம் திறந்துள்ளார்.

Also Read | கிரவுண்ட்ல பாண்டியாவை முறைத்த விராட் கோலி.. டக்குன்னு பாண்டியா செஞ்ச காரியம்..!

CRICKET, GAMBHIR, DHONI, 2011 WC FINALS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்