"இந்த விஷயத்துல 'சிஎஸ்கே' செம 'கெத்து'.. யாராலயும் அடிச்சுக்க முடியாது..." 'புகழ்ந்து' தள்ளிய 'கம்பீர்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் ஏலம், நேற்று முன்தினம் சென்னையில் வைத்து மிகவும் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பாராட்டி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

இந்த மினி ஏலத்தில் சென்னை அணி மொயீன் அலியை 7 கோடிக்கும், கிருஷ்ணப்பா கவுதமை 9.25 கோடிக்கும் எடுத்தது. அது மட்டுமில்லாமல், யாரும் எதிர்பாராத விதமாக, இந்திய வீரர் புஜாராவை அவரின் அடிப்படை விலையான 50 லட்சம் ரூபாய்க்கே சென்னை அணி எடுத்திருந்தது. புஜாராவை சென்னை அணி எடுக்கும் என யாரும் எதிர்பார்க்காத நிலையில், டெஸ்ட் போட்டியில் சிறந்த வீரரை ஏன் டி 20 போட்டியில் சென்னை அணி தேர்வு செய்தது என சிலர் விமர்சனமும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சிஎஸ்கேவின் வீரர்கள் தேர்வு பற்றி பேசிய கவுதம் கம்பீர், 'சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் மேக்ஸ்வெல்லுக்கு தான் குறி வைத்தது. ஆனால், அவரை எடுக்க முடியவில்லை. இதனால், சிஎஸ்கே தோற்றதாக கூற முடியாது. ஏனெனில், மேக்ஸ்வெல்லை வாங்கக் கூடிய தொகையில், அவர்கள் மொயீன் அலி மற்றும் கவுதம் என இரண்டு வீரர்களை வாங்கியுள்ளனர்.

சிஎஸ்கேவின் சிறந்த ஏலங்களில் இதுவும் ஒன்று. மூன்று முக்கிய வீரர்களை மட்டுமே சென்னை அணி எடுத்ததாக அனைவரும் கூறுகிறார்கள். ஆனால், அதுவே அந்த அணிக்கு போதுமானது. ஆர்சிபி, பஞ்சாப் போன்ற அணிகள் அதிக தொகைக்கு வீரர்களை வாங்கினார்கள். ஆனால், சென்னை அணி குறைந்த தொகையில் சிறந்த வீரர்களை வாங்கினார்கள்.

கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் மொயின் அலி ஆகியோர் சிறந்த தேர்வு. நிச்சயம் அவர்கள் சென்னை அணிக்காக இந்த முறை நிறைய போட்டிகளில் வெற்றியைத் தேடித் தருவார்கள்' என கம்பீர் சென்னை அணியின் நிர்வாகத்திற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்