“அடிக்கிற அடியில எல்லாம் தெறிச்சு ஓட வேணாமா..? ‘இவர்’ இப்டியே ஆடுனா சரிபடாதுங்க”- கம்பீர் காட்டம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியினர் தங்களது விளையாட்டில் இன்னும் அதிகப்படியான வேகம் காட்ட வேண்டும் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். மேலும், அதிரடியான பேட்ஸ்மேன் ஒருவர் தனது ஆட்ட முறையை மெருகேற்ற வேண்டும் என்றும் கம்பீர் கூறியுள்ளார்.

Advertising
>
Advertising

இந்தியா- நியூசிலாந்து போட்டியிடும் டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. முதல் போட்டி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜெய்பூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. ஆனாலும், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நெருக்கிப்பிடித்தே ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்தது. கடைசி ஓவரில் எல்லாம் 3 பந்துகளுக்கு 3 ரன்கள் தேவைப்படும் என்ற சூழலில் இந்திய அணி நின்றிருந்தது.

அப்போது, ரிஷப் பண்ட் அடித்த ஒரு பவுண்டரி தான் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தது. ஆனால், இந்திய அணி கடைசி பந்து வரை இழுத்து பரபரப்புடன் ஆட்டத்தை முடிக்காமல் கொஞ்சம் சீக்கிரமாகவே முடித்திருக்கலாம் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய அணியின் ஒட்டுமொத்த ஆட்டமும் சிறப்பாக இருந்தாலும் பேட்ஸ்மேன்கள் ரன்களை சேர்க்கும் அதே வேளையில் ஆட்டத்தை நின்று முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடனும் விளையாட வேண்டும் என்கிறார் கம்பீர்.

கம்பீர் கூறுகையில், “முதலில் பந்துவீசிவிட்டு அடுத்து சேஸிங் செய்து வெற்றி பெறப் போகிறோம் என்றால் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இந்திய அணியினர் தங்களது பலத்தை காட்ட தொடங்க வேண்டும். பேட்டிங்-கை பொறுத்த வரையில் இறங்கி அடித்து விளாசிவிட வேண்டும். சேஸிங் செய்கிறோம் என்றால் பேட்ஸ்மேன்கள் கருணையே இல்லாமல் ஆட வேண்டும். தொழில்முறை ஆட்டக்காரர் ஒருவர் கடைசி பந்து வரையில் ஆட்டத்தை இழுக்கக்கூடாது.

அடுத்த 11 மாதங்களுக்கு இந்த எண்ணம் தான் மனதில் இருக்க வேண்டும். பெரிய சர்வதேச போட்டிகளில் விளையாடப் போகும் போது இறங்கி அடித்து போட்டியை தொடக்கத்தில் இருந்தே நம் கைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தியா விளையாடப் போக வேண்டும். ஜெய்பூர் ஆட்டத்தின் போது பேட்ஸ்மேன்களில் சூர்யகுமார் சிறப்பாக ஆடியிருந்தாலும் அவர் எனக்கு ஏமாற்றம் அளித்துவிட்டார்.

அவரது பேட்டிங் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால், ஆட்டத்தை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் சூர்யகுமாருக்கு வேண்டும். இந்திய அணியில் மீண்டும் தனக்கான இடத்தை ஜெய்பூர் டி20 மூலம் சூர்யகுமார் யாதவ் பிடித்தார். அந்தப் போட்டியிலேயே அதிகப்படியாக 62 ரன்களைக் குவித்தது சூர்யகுமார்தான். ஆனால், 17-வது ஓவரிலேயே அவுட் ஆகிவிட்டார். அவரது பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தாலும் ஆட்டத்தை முடிக்கும் திறன் வேண்டும் என்றால் பேட்டிங் முறையை இன்னும் மெருகேற்ற வேண்டும். நீங்கள் 60, 70 அல்லது 80 ரன்கள் எடுக்கிறீர்கள் என்பது முக்கியம் இல்லை. ஆட்டத்தை நின்று முடிப்பவரே அணியின் முக்கிய வீரர் ஆக வளர முடியும்” எனக் குறிப்பிட்டார்.

CRICKET, GAMBHIR, SURYAKUMAR YADHAV, T20I

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்