VIDEO: பிரஸ் மீட்டில் மேலும் ஒரு சம்பவம்...! இவரு என்ன பண்ணினாரு தெரியுமா...? - சமூக வலைத்தளங்களில் டிரென்டிங் ஆகும் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ரொனால்டோவை தொடர்ந்து பிரெஞ்சு கால்பந்து வீரர் ஒருவர் பத்திரிகையாளர் சந்திப்பில் பீர் பாட்டிலை அகற்றிய சம்பவம் வைரலாகி வருகிறது.

ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வரும் பிரபல யூரோ-2020 கால்பந்து தொடரில் போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.

அப்போது ரொனால்டோ, தனது மேஜையில் இருந்த இரண்டு கோக்கோ கோலா பாட்டில்களை உடனடியாக எடுத்து அகற்றினார். அதுமட்டுமில்லாமல் அங்கே தனியாக நின்றிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடியுங்கள் என்று கூறினார். கிறிஸ்டியானோ ரொனால்டோவின் இந்த செயல் உலகம் முழுவதும் பேசுபொருளாகி விட்டது.

ரொனால்டோவின் இந்த செயல் மூலம் கோக்கோ கோலா நிறுவனத்தின் மதிப்பு ஒரேடியாக சரிந்து சுமார் 29 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை சந்தித்து.

அதேப்போல், பிரபல கால்பந்து வீரர் பத்திரிகையாளர் சந்திப்பின்போது செய்த செயல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பிரெஞ்சு கால்பந்து வீரரான பால் போக்பா இன்று (16-06-2021) போட்டிக்கு முன்னதாக பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் போது, மேஜையில் தனக்கு முன்னால் Heineken பீர் பாட்டில் இருப்பதை பார்த்து உடனடியாக அந்த பாட்டிலை அகற்றினார்.

பால் போக்பா இஸ்லாம் மதத்தை பின்பற்றி வருவதால், இஸ்லாம் மது அருந்துவதை தடை செய்வதால், மதத்தை பின்பற்றி பால் போக்பா இவ்வாறு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்