சென்னையில மேட்ச்.. Fans-க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மெட்ரோ நிர்வாகம்.. போடு வெடிய..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை சென்னையில் நடைபெற இருக்கும் நிலையில் சென்னை மெட்ரோ நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

Advertising
>
Advertising

                              Images are subject to © copyright to their respective owners.

Also Read | தோனிக்கு இந்த IPL சீசன் தான் கடைசியா?.. வாட்சன் கொடுத்த ரிப்ளை.. கொண்டாடும் Fans..!

கவாஸ்கர் பார்டர் டெஸ்ட் தொடர்

தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க கவாஸ்கர் பார்டர் டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்திருக்கிறது. நான்கு போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் முதல் போட்டி நாக்பூரில் வைத்து நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2 - 0 என்ற நிலையில் முன்னிலை பெற்றது.

Images are subject to © copyright to their respective owners.

அதற்கு பிறகு இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றபெற்றிருந்தது. இதனால் 2-1 என்ற நிலை ஏற்படவே, இந்திய அணி கோப்பையை கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் நான்காவது டெஸ்ட் போட்டி டிரா ஆகவே, 2-1 என்ற கணக்கில் கோப்பையை வென்றிருக்கிறது இந்திய அணி. இதன் பலனாக உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றிருக்கிறது.

ஒருநாள் தொடர்

இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனையடுத்து விசாகப்பட்டினத்தில் வைத்து இரண்டாவது போட்டி நடைபெற்றது. அதில், ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றிருந்தது. இந்த சூழ்நிலையில் கோப்பை யாருக்கு? என தீர்மானிக்கும் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

மெட்ரோவின் அறிவிப்பு

இந்நிலையில் சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு உதவும் வகையில் மினி பேருந்து வசதி அளிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து வெளியான அறிக்கையில்,"இந்தியா-ஆஸ்திரேலியா ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இந்த போட்டியை காண ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் வருகை தருவார்கள். இதற்காகவே சென்னை மெட்ரோ இரயில் அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் எம். சிதம்பரம் மைதானம் வரை இலவசமாக மினி பஸ் சேவை வசதியை நாளை காலை 11:00 மணி முதல் கிரிக்கெட் போட்டி முடியும்வரை கிரிக்கெட் ரசிகர்களுக்காகவே செய்துள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

22-03-2023, அன்று மட்டும் மெட்ரோ இரயில் சேவை நெரிசல்மிகு நேரமான மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை உள்ள நெரிசல்மிகு நேரத்தை இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த தருணத்தில், சென்னை மெட்ரோ இரயில் வாகனநிறுத்தும் இடங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். சென்னை பெருநகர மக்களும், கிரிக்கெட் ரசிகர்களும், பொதுமக்களும், மெட்ரோ இரயில் நிர்வாகம் செய்துள்ள இந்த வசதிகளை பயன்படுத்தி கொள்ளலாம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read | போடு.. அமெரிக்காவையே திரும்பி பார்க்க வச்ச நாட்டு நாட்டு பாடல்.. இயக்குநர் ராஜமௌலி பகிர்ந்த வீடியோ..!

FREE MINI BUS, METRO, IND VS AUS, IND VS AUS 3RD ODI, CHENNAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்