மைதானத்தில் கலங்கி நின்ற எம்பாப்பே.. ஓடி வந்து ஆறுதல் சொன்ன பிரான்ஸ் அதிபர்!!.. கால்பந்து ரசிகர்களை ஈர்த்த வீடியோ!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமத்திய கிழக்கு நாடான கத்தாரில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றது.
Also Read | "டிசம்பர் 18 மெஸ்ஸி கையில் கோப்பை இருக்கும்".. 7 வருடம் முன்பே கணித்த ரசிகர்..?? FIFA2022
இதன் இறுதி போட்டியில், அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதி இருந்தது. அர்ஜென்டினா அணியில் ஆடி வரும் நட்சத்திர வீரர் மெஸ்ஸி தலைமையில் இந்த முறை அந்த அணி கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் எதிர்பார்த்தும் வந்தனர்.
மேலும், உலக அளவில் கால்பந்து ரசிகர்கள் உள்ளதால், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கால்பந்து உலக கோப்பை இறுதி போட்டி நடந்தது.
முதல் பாதியில், அர்ஜென்டினா அணி இரண்டு கோல்கள் அடித்து முன்னிலை வகிக்க, இரண்டாவது பாதியில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்பே அடுத்தடுத்த நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்ததால், அர்ஜென்டினா அணி வீரர்கள் ஆடி போயினர். இதன் பின்னர், கூடுதல் நிமிடத்தில் மெஸ்ஸி ஒரு கோல் அடிக்க, போட்டி முடிய ஒரு சில நிமிடம் இருக்கும் போது, எம்பாப்பே பெனால்ட்டி வாய்ப்பை கோலாக மாற்றினார். இதனால், கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் சேர்த்து 3 - 3 என்ற கணக்கில் இருந்ததால், பின்னர் பெனால்டி சுற்றுக்கு போனது.
பெனால்டி ஷூட்அவுட் முறையில் 4- 2 என அர்ஜென்டினா வெற்றி பெற்றது. முதல் பாதியில் அர்ஜென்டினா ஆதிக்கம் செலுத்தி இருந்தாலும், இரண்டாம் பாதிக்கு பிறகு பிரான்ஸ் அணியின் எம்பாப்பேவும் ஹாட்ரிக் கோல்கள் அடிக்க, கடைசி நிமிடம் வரை ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைக்கும் வகையில் கால்பந்து உலக கோப்பையின் இறுதி போட்டி அமைந்திருந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு பிரான்ஸ் அணி கால்பந்து உலக கோப்பையை கைப்பற்றி இருந்த நிலையில், இந்த முறை பெனால்டி வாய்ப்பில் கோட்டை விட்டுள்ளது.
இறுதி போட்டியில் பிரான்ஸ் வீரர் எம்பாப்பே ஹாட்ரிக் கோல் அடித்தும் வெற்றி பெற முடியாமல் போனதால் மைதானத்தில் அவர் மைதானத்தில் கலங்கி நின்றார். அந்த சமயத்தில், பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான், களத்திற்கு நேரடியாக வந்து எம்பாப்பேவுக்கு ஆறுதல் கூறினார். ஒரு நாட்டின் தலைமை பொறுப்பில் இருக்கும் அதிபர், கால்பந்து வீரரை மைதானத்திலேயே வந்து தேற்றியது உலகளவில் அதிகம் வைரலாகி வருகிறது.
முன்னதாக, உலக கோப்பை இறுதி போட்டி வரலாற்றில், ஹாட்ரிக் அடித்த இரண்டாவது வீரர் என்ற சிறப்பையும் எம்பாப்வே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்