‘5 பேங்க் பாஸ்புக், 2 லேப்டாப்’!.. பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் மீது இந்தியாவில் இருந்து சூதாட்டம்.. அதிரவைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் மீது இந்தியாவில் இருந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 தொடர் போல, பாகிஸ்தானில் ‘பாகிஸ்தான் சூப்பர் லீக்’ (PSL) என்ற தொடர் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற PSL தொடர் கொரோனா தொற்று காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டு, தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் மீது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து பனோரமா ஹில்ஸ் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது PSL கிரிக்கெட் போட்டிகள் மீது சூதாட்டம் நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதனை அடுத்து அவர்களிடமிருந்து இரண்டு LCD டிவிகள், இரண்டு லேப்டாப்கள், ஒரு டேப், மூன்று ஸ்மார்ட்போன்கள் மற்றும் 5 வங்கி கணக்கு புத்தகம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சூதாட்டம், கிளேடியேட்டர்ஸ் மற்றும் பெஷாவர் அணிகளுக்கு இடையேயான போட்டியின் மீது நடைபெற்றதாகவும், இதை ஸ்ரீனிவாஸ் என்பவர் ஒருங்கிணைத்து நடத்தியதாகவும் பிஎம் பாலம் காவல் ஆய்வாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் சூப்பர் லீக் மீது இந்தியாவில் சூதாட்டம் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்