இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து கவுண்டி அணிக்காக விளையாடும் 4 இந்திய வீரர்கள் இவங்க தான்..! இதான் காரணம்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியைச் சேர்ந்த நான்கு வீரர்கள் லீசெஸ்டர்ஷைர் கவுண்டி கிரிக்கெட் கிளப்காக பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறார்கள்.

Advertising
>
Advertising

Also Read | செல்ல நாயால் அடிச்ச ஜாக்பாட்.. ஒரே நாளில் கோடீஸ்வரரான அதிர்ஷ்டக்காரர்..!

கடந்த ஒரு வாரமாக இங்கிலாந்தில் இந்தியாவின் பயிற்சித் தளமாக விளங்கிய லீசெஸ்டர்ஷையரின் மைதானமான அப்டன்ஸ்டீல் கவுண்டி மைதானத்தில் புதன்கிழமை பயிற்சி ஆட்டம் தொடங்குகிறது.

சித்தேஸ்வர் புஜாரா, விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் லீய்செஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடும் நான்கு இந்திய வீரர்கள்.

"எல்சிசிசி, பிசிசிஐ மற்றும் ஈசிபி ஆகிய அனைத்து வாரியங்களின் ஒப்புதலோடு நான்கு வீரர்களும் அந்நிய அணியில் அங்கம் வகிக்க அனுமதிக்கின்றன. இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களும் உடற்தகுதிக்கு உட்பட்டு இப்போட்டியில் விளையாட அனுமதிக்கப்படுவர் என  LCCC கிரிக்கெட் கிளப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் நெகிழ்வுத்தன்மையை வழங்குவதற்கும், பந்துவீச்சு பணிச்சுமைகளை நிர்வகிப்பதற்கும் ஒரு அணிக்கு 13 வீரர்களுடன் போட்டி விளையாடப்படும்,” என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஜூலை 1ம் தேதி துவங்க உள்ளது.கடந்த ஆண்டு நடந்த தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டியாக இது கருதப்படுகிறது. இந்திய அணியில் கோவிட் -19 தொற்று ஏற்ப்பட்டதால் அந்த நேரத்தில் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்திய அணியினர் இந்த தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு தொடர் ஒத்திவைக்கப்பட்டதிலிருந்து இரு அணிகளிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகி ரோஹித் சர்மா பொறுப்பேற்றார். இதற்கிடையில் ஜோ ரூட் நீக்கப்பட்டதையடுத்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

இரு தரப்பிலும் புதிய தலைமை பயிற்சியாளர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு ரவி சாஸ்திரி விலகி, ராகுல் டிராவிட் இந்தியாவுக்காக பொறுப்பேற்றார், கிறிஸ் சில்வர்வுட் கடந்த மாதம் நீக்கப்பட்டதை அடுத்து, இங்கிலாந்து டெஸ்ட் பயிற்சியாளராக பிரெண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டார்.

Also Read | விராட் கோலி பகிர்ந்த practice புகைப்படங்கள்… அனுஷ்கா ஷர்மாவின் ரொமாண்டிக் கமெண்ட்

CRICKET, INDIAN PLAYERS, LEICESTERSHIRE COUNTY CRICKET CLUB

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்