SARA LEE: முன்னாள் WWE வீராங்கனைக்கு நேர்ந்த சோகம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

முன்னாள் WWE வீராங்கனையான சாரா லீ மரணமடைந்திருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர். இதனால் WWE ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | "அந்த லாட்டரியவா குப்பைதொட்டில போட போனேன்".. பரிசு கிடைக்காதுன்னு நெனச்சு பெண் எடுத்த முடிவு.. அடுத்த வினாடி வாழ்க்கையே மாறிப்போச்சு..!

சாரா லீ

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ஹோப் நகரத்தை சேர்ந்தவர் சாரா லீ. கல்லூரி படிக்கும் காலத்திலேயே குத்துச்சண்டை போட்டிகளில் ஆர்வம் கொண்டிருந்த சாரா, பளுதூக்குவதிலும் திறமையானவராக வலம் வந்திருக்கிறார். சாரா லீ 2015 இல் WWE ரியாலிட்டி காம்பிடிஷன் சீரிஸில் Tough Enough பட்டத்தை வென்றார். அதன்பிறகு NXT தொடரிலும் ஒப்பந்தமானார் சாரா. அடுத்தடுத்த வெற்றிகள் மூலமாக சாரா ஏராளமான ரசிகர்களை ஈர்த்தார். 30 வயதான சாரா கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னாள் மல்யுத்த வீரர் வெஸ்டின் பிளேக்கை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், இன்று சாரா மரணமடைந்திருப்பதாக அவரது தாய் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த அறிவிப்பில்,“கனத்த இதயத்துடன் இந்த செய்தியை உங்களிடம் பகிர்கிறேன், நம்முடைய சாரா வெஸ்டன், ஏசுவிடம் சென்றுவிட்டார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரபலங்களின் இரங்கல்

சாராவின் மறைவையொட்டி WWE போட்டியின் சூப்பர் ஸ்டார்களான செல்சியா கிரீன், நிக்கி ஆஷ் உள்ளிட்ட ஏராளமானோர் சாரா லீ மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து WWE வீராங்கனை நிக்கி எழுதிய பதிவில்,"நீ பல வழிகளில் மிகவும் திறமையானவராக இருந்தாய்.  உங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் மிகவும் நேசித்தவள் நீ. அனைவரிடத்திலும் மிகவும் அன்பாகவும், தன்னலமற்றவராகவும் இருந்தாய். என்னை சிரிக்க வைத்தாய். ஐ லவ் யூ சாரா" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் WWE அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் “சாரா லீ மறைவுச் செய்தி கேட்டு WWE அமைப்பு மிகுந்த வேதனைப்படுகிறது. Tough Enough போட்டியின் முன்னாள் சாம்பியன் சாரா லீ. உலகளவில் WWE போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும் இளைஞர்களுக்கு உற்சாகமூட்டுபவராக சாரா லீ இருந்தார். சாரா லீ குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் WWE ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read | புருஷனுக்காக 3 வருஷமா ஸ்கெட்ச் போட்டு காத்திருந்த மனைவி.. போலீசில் சிக்கியதும் சொல்லிய விஷயம்.. கதிகலங்கிப்போன உறவினர்கள்..!

WWE WRESTLER, WWE WRESTLER SARA LEE, SARA LEE PASSED AWAY

மற்ற செய்திகள்