RIP ஸ்காட்ஹால்.. மரணமடைந்த பிரபல WWE வீரர்.. சோகத்தில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

முன்னாள் WWE வீரரான ஸ்காட் ஹால் இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் WWE ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertising
>
Advertising

ஸ்காட் ஹால்

1990 களில் WWE ன் முன்னணி வீரராக வலம்வந்த ஸ்காட் ஹால் (எ) ரேசர் ரோமன் இன்று தனது 63 வயதில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1984 ஆம் ஆண்டு முதன் முதலில் WCW எனப்படும் World Championship Wrestling ல் கால்பதித்தார்.

பின்னர் 1992 ஆம் ஆண்டு WWE ல் அறிமுகமான ஹால், அங்கேயும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். நான்கு முறை இன்டர்கான்டினென்டல் சாம்பியன்ஷிப்பை பெற்றவரான ஸ்காட் ஹாலுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.

மீண்டும் WCW

1996 ஆம் ஆண்டு தான் முதலில் அறிமுகமான WCW போட்டியில் கலந்துகொண்டார். அப்போதுதான் ஹல்க் ஹோகன் மற்றும் கெவின் நாஷ் ஆகியோருடன் இணைந்து 'nWo' எனப்படும் நியூயார்க் ஆர்டர் எனும் டீமை துவங்கினார்.  இந்த ஹால் - ஹல்க் - நாஷ் கூட்டணிக்கு அப்போதைய காலகட்டத்தில் ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் இருந்தது.

இரங்கல்

இந்நிலையில், புகழ்பெற்ற WWE வீரரான ஸ்காட் ஹாலின் மறைவிற்கு WWE அமைப்பு அஞ்சலி செலுத்தி உள்ளது. இதுகுறித்து WWE தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஸ்காட் ஹாலின் பிரபல வரிகளான "Bad times don't last, but bad guys do" என்பதை குறிப்பிட்டு உள்ளது. மேலும்," இரண்டு முறை ஹால் ஆஃப் ஃபேம் விருது பெற்ற ஸ்காட் ஹால் மறைந்த செய்தி கவலை அளிக்கிறது. அவரது குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளது WWE அமைப்பு.

3 மாரடைப்பு

இடுப்பு முறிந்த நிலையில் மருத்துவமனையில் ஸ்காட் அனுமதிக்கப்பட்டதாகவும் நேற்று அவருக்கு அடுத்தடுத்து 3 முறை மாரடைப்பு ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன் காரணமாகவே ஸ்காட் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சோகம்

தன்னுடைய வித்தியாசமான பாணியிலான ஆட்டத்தால் ரசிகர்களின் அன்பைப் பெற்ற ஸ்காட் ஹாலின் மறைவிற்கு ஷான் மைக்கில்ஸ், நிக்கி & ப்ரீ, சராயா உள்ளிட்ட WWE வீரர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
ஸ்காட் ஹாலின் மறைவு செய்தியால் அதிர்ச்சி அடைந்துள்ள அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

WWE, SCOTTHALL, WCW, ஸ்காட்ஹால், ரேசர்ரோமன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்