“2 மாசமோ இல்ல, ஒன்றரை மாசமோ சீக்கிரம் இதை பண்ணுங்க”.. கோலிக்காக களமிறங்கிய ரவி சாஸ்திரி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

விராட் கோலிக்கு சிறிது காலம் ஓய்வு தேவை என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | அடுத்தடுத்து தீப்பிடிக்கும் E-bike.. ‘அதை செக் பண்ணியே ஆகணும்’.. மத்திய அரசு எடுத்து அதிரடி முடிவு..!

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 31-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்  அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர் அனுஜ் ராவத் 4 ரன்கள் எடுத்திருந்த போது ஷமிரா ஓவரில் ஆட்டமிழந்தார்.

இதனை அடுத்து களமிறங்கிய விராட் கோலி, தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனால் பெங்களூரு அணி 7 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனாலும் கேப்டன் டு பிளசிஸ் (96 ரன்கள்) பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதனால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை பெங்களூரு அணி எடுத்தது.

இதனை அடுத்து பேட்டிங் செய்த லக்னோ அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றாலும், விராட் கோலி தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருவது அந்த அணியின் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, விராட் கோலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘விராட் கோலிக்கு சிறிது காலம் ஓய்வு தேவை. அது 2 மாதங்களாக இருந்தாலும் சரி, ஒன்றரை மாதங்களாக இருந்தாலும் சரி அல்லது இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு பிறகு இருந்தாலும் சரி, அதற்கு முன்னதாக இருந்தாலும் சரி, ஆனால் கோலிக்கு ஓய்வு நிச்சயம் தேவை. அவர் ஓய்வு எடுத்து வந்தால்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என நான் கருதுகிறேன். தொடர்ந்து விளையாடுவதால் அவர் புத்துணர்ச்சியை இழந்துவிட்டார். பயோ-பபுள் சூழல் மிகுந்த மனச்சோர்வை உண்டாக்கக்கூடியது. கோலி இன்னும் 6-7 ஆண்டுகள் நல்ல கிரிக்கெட் வீரராக வலம் வருவார்’ என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

Also Read | ‘கல்யாணம் ஆகி 15 நாள்தான் ஆச்சு’.. நண்பன் பிறந்தநாளை கொண்டாட சென்ற புதுமாப்பிள்ளைக்கு நடந்த சோகம்..!

CRICKET, RCB, VIRAT KOHLI, RAVI SHASTRI, விராட் கோலி, ரவி சாஸ்திரி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்