"30 வருஷமா யாருக்கும் சொல்லல"..மறைக்கப்பட்ட கடந்த கால வாழ்க்கை.. 'ஒலிம்பிக்' தங்கம் வென்ற வீரர் முதல் முறை மனம்திறந்து பேச்சு.!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

முன்னாள் ஒலிம்பிக் வீரரான முகமது ஃபாரா தனது கடந்த கால வாழ்க்கை பற்றி முதன்முறையாக மனம் திறந்திருக்கிறார். அவர் வெளியிட்ட தகவல்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | எலான் மஸ்க்கின் கனவுத் திட்டம்..டெஸ்ட் பண்ணப்போ வெடிச்ச ராக்கெட் பூஸ்டர்.. வைரலாகும் வீடியோ..!

2012 லண்டன் ஒலிம்பிக் மற்றும் 2016 ரியோ ஒலிம்பிக்கில் இங்கிலாந்து சார்பில் கலந்துகொண்டு பதக்கம் பெற்றவர் முகமது. முன்னதாக தனது சிறுவயதில் சோமாலியாவில் இருந்து பெற்றோருடன் இங்கிலாந்துக்கு குடிபெயர்த்ததாக முகமது தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனது உண்மையான கடந்த கால வாழ்க்கை பற்றி முதன்முறையாக மனம் திறந்திருக்கிறார் முகமது. இதுபற்றி அவர் பேசும்போது தனது குடும்பம் இதுவரை பிரிட்டனுக்கு ஒருமுறை கூட வந்ததில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஃபராவுக்கு நான்கு வயதாக இருந்தபோது அவரது தந்தை சோமாலியாவில் உள்நாட்டு கலவரத்தில் கொல்லப்பட்டார். அவரது தாயும் இரண்டு சகோதரர்களும் வட திசையில் உள்ள மாகாணமான சோமாலிலாண்ட்-ல் வசிக்கின்றனர். உள்நாட்டுப் போரினால் தனது குடும்பம் பிளவுபட்டதாக தெரிவித்திருக்கிறார் முகமது.

வேறு பெயர்

தனது கடந்த கால வாழ்க்கை பற்றி பேசுகையில்," என்னுடைய பெயர் கூட யாருக்கும் தெரியாது. நான் சோமாலியாவின் வட மாகாணமான சோமாலிலாண்ட்-ல் பிறந்தவன். எனது உண்மையான பெயர் ஹுசைன் அப்தி கஹீன். கடந்த காலத்தில் நான் சொல்லியதைப்போல, என் பெற்றோர் இங்கிலாந்தில் வசிக்கவில்லை. எனக்கு 9 வயதான போது கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டி வழியாக இங்கிலாந்துக்கு வந்தேன். அதுவும் முன்பின் தெரியாத ஒரு பெண் என்னை அழைத்துவந்தார். அவர்தான் எனக்கு முகமது ஃபாரா எனப் பெயரிட்டார். நான் ஒரு வீட்டில் பணியாளராக சேர்க்கப்பட்டடேன்" என்றார்.

மேலும், பலரிடம் தனது கடந்த கால வாழ்க்கை குறித்து மறைத்துவிட்டதாகவும் தனது குழந்தைகள் அவ்வப்போது கேள்வி கேட்கும்போது உண்மையை சொல்லமுடியாமல் தவித்ததாகவும் கூறியுள்ளார் முகமது. தற்போது இதனை வெளிப்படுத்துவதன் மூலமாக தன்னால் நிம்மதியாக வாழ முடியும் என நம்புவதாகவும் முகமது தெரிவித்திருக்கிறார்.

சிக்கல்

இங்கிலாந்துக்கு வந்த பிறகு தன்னுடைய உறவினர்கள் பற்றிய விபரங்கள் அனைத்தையும் அழைத்துவந்த பெண்மணி கிழித்து எறிந்ததாகவும், அப்போதுதான் தான் சிக்கலில் இருப்பதை உணர்ந்ததாகவும் கூறும் முகமது, இறுதியில் தனது உடற்கல்வி ஆசிரியர் ஆலன் வாட்கின்சனிடம் உண்மையைச் சொல்லியிருக்கிறார். அதன்பிறகு நண்பரின் வீட்டில் வசிக்கத் துவங்கியுள்ளார்.

தடகள போட்டியில் ஆர்வம் கொண்டு அதனையே வாழ்க்கையாக மாற்றிக்கொண்ட பின்னர் தான் இழந்தவற்றை மீண்டும் பெற்றதாகவும் தெரிவித்திருக்கிறார். இதுவரையில் 4 முறை ஒலிம்பிக் தங்கம் வென்ற முகமது தன்னுடைய கடந்த கால வாழ்க்கை பற்றி முதன்முறையாக மனம் திறந்திருப்பது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | ஆச்சர்யமா இருக்கே.. அருவியில் இருந்து மேலே செல்லும் தண்ணீர்..ஓஹோ இதான் காரணமா?.. IFS அதிகாரி பகிர்ந்த வீடியோ..!

FORMER OLYMPIC CHAMPION, MO FARAH, OLYMPIC CHAMPION MO FARAH

மற்ற செய்திகள்