‘கோலியோட எனர்ஜி அவருதான்’- முன்னாள் நியூசி., கேப்டன் போட்டுடைத்த ரகசியம்; இது உங்களுக்குத் தெரிஞ்சிருக்காது!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிவு பெற்றிருந்தாலும், அது குறித்த பேச்சுகள் ஓய்ந்தபாடில்லை. இரண்டாவது டெஸ்ட்டில் இமாலய வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா, டெஸ்ட் அணிகளுக்கான ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு மிகவும் ‘எனர்ஜி’ தரும் வீரர் ஒருவர் அணியில் இருக்கிறார். அது குறித்த ரகசியத்தை நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி போட்டு உடைத்துள்ளார்.

Advertising
>
Advertising

இது பற்றி அவர் கூறுகையில், ‘முகமது சிராஜ் ஒரு ஸ்பெஷல் வீரர் தான். எப்போது அவர் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தாலும் எதாவது ஒரு அசாத்தியமான விஷயம் நடக்கிறது. விராட் கோலியும் சிராஜைத் தான் அதிகம் நம்புகிறார். அவரைக் கொண்டு வந்தால் ஒரு எனர்ஜி கிடைக்கும் என்பதை உணர்ந்து பல முறை பந்தை அவரிடம் தான் கொடுக்கிறார். எப்போது சிராஜ் பவுலிங் வீச வந்தாலும் மிகவும் ஆக்ரோஷத்தோடு செயல்படுகிறார்.

ஆரம்பம் முதல் இறுதி வரை அவரது இந்த ஆக்ரோஷமும் துடிப்பும் அப்படியே இருக்கிறது. சிராஜின் பந்து வீச்சு வேகம் எப்போதும் குறைவதில்லை. இது தான் ஒரு வேகப் பந்து வீச்சாளரிடம் இருந்து ஒரு கேப்டன் எதிர்பார்க்கும் விஷயம். இதை கச்சிதமாக செய்கின்றார் சிராஜ்’ என்று கூறியவர், அடுத்ததாக வரும் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் சிராஜ் தான் இந்தியாவின் முக்கிய வேகப் பந்து வீச்சாளராக இருப்பார் என்று ஆருடம் கூறுகிறார்.

அவர் மேலும் பேசுகையில், ‘நான் இந்திய அணியில் இருக்கும் அனுபவம் வாய்ந்த இஷாந்த் ஷர்மாவை மட்டம் தட்டவில்லை. அவரை குறைவாக மதிப்பிடவில்லை. ஆனால், இந்த நேரத்தில் இந்திய அணிக்கு சிராஜ் போன்ற ஒருவரால் அணிக்கு நிறைய கொடுக்க முடியும் என்று நினைக்கிறேன். குறிப்பாக தென் ஆப்ரிக்க தட்பவெப்ப சூழலில் சிராஜ் போன்ற ஒருவரால் மிகத் திறமையாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன்’ என்று முடிவாக கூறினார்.

இதுவரை முகமது சிராஜ், இந்தியாவுக்காக 10 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். அதற்குள் 33 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனங்களையும் ஈர்த்துள்ளார். அவரது பவுலிர் சராசரி 27.69 ஆகும். அவரது பவுலிங் ஸ்டிரைக் ரேட் 53.8 ஆகும். இப்படி அசத்தலான பெர்ஃபார்மென்ஸ் மூலம் சிராஜ், இந்தியாவைத் தாண்டியும் பல ஜாம்பவான்களின் கவனங்களைப் பெற்று பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.

தற்போது நடந்த நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் கூட சிராஜ், இரண்டாவது இன்னிங்ஸின் போது வெறும் 4 ஓவர்கள் மட்டுமே வீசினார். அதில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் நியூசிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை நிலை குலையச் செய்தார். இது அணியின் வெற்றிக்கு வித்திட்டது.

CRICKET, KOHLI, MOHAMMED SIRAJ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்