ஏர்போர்ட்டில் வைத்து கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர்.. அதுக்கு முன்னாடி அவர் போட்ட உருக்கமான போஸ்ட்.. முழு விபரம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேபாள நாட்டின் கிரிக்கெட் வீரரான சந்தீப் லாமிச்சானே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது கிரிக்கெட் உலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | இலக்கியத்துக்கான நோபல் பரிசு.. உலகத்தை தன் எழுத்தால் அசைத்துப் பார்த்த அனி எர்னாக்ஸ்.. யாருப்பா இவங்க..!

கிரிக்கெட் வீரர்

சந்தீப் லாமிச்சானே மீது இளம்பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். அதில் கடந்த ஆகஸ்டு மாதம் சந்தீப் லாமிச்சானே தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து நேற்று விமானம் மூலமாக நேபாளத்திற்கு திரும்பிய சந்தீப் லாமிச்சானேவை விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினர் நேற்று கைது செய்திருக்கின்றனர்.

அந்த இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் காத்மாண்டு நீதிமன்றம் சந்தீப்பிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்நிலையில் கரீபியன் பிரீமியர் லீக்கில் கலந்துகொள்ள சென்றிருந்த சந்தீப் இது குறித்து அறிக்கை ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

அறிக்கை

அதில், "என்மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியில் அணுக உள்ளேன். நான் காலை 10:00 மணிக்கு கத்தார் ஏர்வேஸ் மூலமாக காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குகிறேன். சட்ட விதிமுறைகளுக்கும் காவல்துறை விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். எனக்கு நீதி கிடைக்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன், விரைவில் கிரிக்கெட் மைதானத்திற்கு திரும்பி எனது அன்புக்குரிய நாட்டின் பெயரையும் புகழையும் மேம்படுத்துவேன். விரைவான விசாரணைக்காக நான் பிரார்த்திக்கிறேன். விசாரணையின் அனைத்து நிலைகளிலும் நான் முழு ஒத்துழைப்பு அளிப்பேன் மற்றும் நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க சட்டப் போராட்டம் நடத்துவேன். நீதி வெல்லட்டும்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

கைது

இந்நிலையில், காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் சந்தீப் தரையிறங்கியதும் காவல்துறையினர் அவரை கைது செய்திருக்கின்றனர். இதனிடையே, வழக்கு விசாரணை முடியும் வரையில் சந்தீப்பிற்கு நேபாள கிரிக்கெட் வாரியம் தடை விதித்திருக்கிறது.

நேபாள கிரிக்கெட் அணிக்காக சந்தீப் லமிச்சனே, இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளர். ஒருநாள் போட்டிகளில் 69 விக்கெட்டுகளையும், T20 சர்வதேசப் போட்டிகளில் 78 விக்கெட்டுகளையும் சந்தீப் வீழ்த்தியிருக்கிறார். மேலும் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. கடைசியாக ஜமைக்கா தாளாவாஸ் அணிக்காக கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் சந்தீப் விளையாடினார்.

Also Read | ரூ.360 கோடியில் கட்டப்படும் பிரதமருக்கான பிரம்மாண்ட குடியிருப்பு வளாகம்.. 3 இடங்களை இணைக்க சுரங்கப்பாதைகள்.. பிரம்மிக்க வைக்கும் வசதிகள்..!

CRICKET, AIRPORT, NEPAL CRICKET CAPTAIN, SANDEEP LAMICHHANE, SANDEEP LAMICHHANE ARREST, சந்தீப் லாமிச்சானே

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்