"அவர்கிட்ட காசு இருக்காது.. பால் பாக்கெட் விற்பனை செஞ்சு தான்".. ரோஹித் ஷர்மா குறித்து உருக்கமாக பேசிய ஓஜா..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரரான பிரக்யான் ஓஜா, ரோஹித் ஷர்மா குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார்.

Advertising
>
Advertising

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | "உங்களுக்கு பரிசு விழுந்திருக்கு".. இங்கிலாந்து-ல இருந்து வந்த போன்கால்.. நம்பிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

ஐபிஎல் 2023

கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கி டிசம்பர் 28 ஆம் தேதி வரை இந்தியாவில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட இருக்கிறது.

5 முறை சேம்பியனான மும்பை இந்தியன்ஸ் கடந்த வருட சீசனில் கடைசி இடம் பிடித்து வெளியேறியது. இதனால் அந்த அணி ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை கோப்பையை கைப்பற்றுமா? என இப்போதே ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பேசி வருகின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

ரோஹித் ஷர்மா

துவக்கத்தில் டெக்கான் அணிக்காக விளையாடிய ரோஹித் ஷர்மா மற்றும் ஓஜா அதன் பிறகு மும்பை அணிக்காக விளையாட துவங்கினர். இந்நிலையில் ரோஹித் ஷர்மாவின் ஆரம்ப கால வாழ்க்கை குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார் ஓஜா. அப்போது அவர்,"15 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய போட்டியில் ரோஹித்தை முதன்முதலில் சந்தித்தபோது, ​​அவர் மிகவும் சிறப்பான வீரர் என்று அனைவரும் கூறினர். அங்கு அவருக்கு எதிராக விளையாடி விக்கெட்டை வீழ்த்தினேன். ரோஹித் ஒரு சாதரண மும்பை பையன், அதிகம் பேசவில்லை, ஆனால் விளையாடும்போது ஆக்ரோஷமாக இருந்தார். உண்மையில், நாங்கள் ஒருவரையொருவர் அறியாதபோது அவர் ஏன் என்னிடம் இவ்வளவு ஆக்ரோஷமாக நடந்துகொள்கிறார் என்று நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். ஆனால் அதன் பிறகு எங்கள் நட்பு வளர ஆரம்பித்தது.

Images are subject to © copyright to their respective owners.

அவர் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவர். கிரிக்கெட் கிட்களுக்கான அவரது பட்ஜெட் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டது என்று நாங்கள் விவாதித்தபோது அவர் ஒருமுறை உணர்ச்சிவசப்பட்டார் என்பது எனக்கு நினைவிருக்கிறது. உண்மையில், அவர் பால் பாக்கெட்டுகளையும் டெலிவரி செய்தார். நீண்ட காலத்துக்கு முன்னர் நடந்தது அது. அவரை இப்போது பார்க்க பெருமையாக இருக்கிறது" என்றார்.

Also Read | "புஷ்பா-ன்னா ஃபிளவருன்னு நெனச்சீங்களா".. ஜடேஜா செஞ்ச சம்பவம்.. வீடியோ..!

CRICKET, MUMBAI CRICKETER, MUMBAI CRICKETER PRAGYAN OJHA, ROHIT SHARMA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்