RIP : காலையில் முன்னாள் வீரருக்கு இரங்கல்.. மாலையில் மாரடைப்பு.. காலமானார் சுழல் ஜாம்பவான் வார்னே
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சுழற்பந்து வீச்சில் ஜாம்பவானுமான ஷேன் வார்னே, தன்னுடைய 52 வயதில் உயிரிழந்துள்ள தகவல், ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தாய்லாந்தில் இருந்த வார்னே, சந்தேகத்திற்குரிய மாரடைப்பு ஏற்பட்டு, உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் உலகில் பல அரிய சாதனைகளை படைத்துள்ள வார்னேவின் மறைவு, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை உண்டு பண்ணியுள்ளது.
கிரிக்கெட் உலகின் சிறந்த விக்கெட்டுகள் அல்லது பந்துகள் எது என எடுத்துக் கொண்டால், வார்னேவின் சுழல் ஜாலத்துக்கு நிச்சயம் இடமுண்டு. இந்திய அணிக்கு எதிராக, கடந்த 1992 ஆம் ஆண்டு, சிட்னியில் வைத்து நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா அணிக்காக ஷேன் வார்னே அறிமுகம் ஆனார்.
மொத்தம் 145 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஷேன் வார்னே, 708 விக்கெட்டுகளை எடுத்து பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். சுழற்பந்து வீச்சில், தன்னுடைய மாயாஜாலத்தால், உலகளவிலான பல சிறந்த பேட்ஸ்மேன்களை திணற செய்தவர் ஷேன் வார்னே.
தன்னுடைய 15 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் பயணத்தில், ஆஸ்திரேலியா அணிக்காக பல்வேறு வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார். முன்னதாக, இன்று காலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் மற்றொரு ஜாம்பவான் ராட் மார்ஷ் உயிரிழந்த போது, அவருக்கு அஞ்சலி செலுத்தி வார்னே ட்வீட் செய்திருந்தார்.
அதே நாளில், வார்னேவும் மாராடைப்பால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நாங்க தோத்தா 'வீட்ட' கொளுத்திடுவாங்க! மோசமா விளையாடினா 1.5 கோடி ரூபாய் தர்றேன்.. ஷேன் வார்ன்-டம் சொன்ன முன்னாள் வீரர்!
- 'இதெல்லாம்' தேவையா...? 'அஸ்வின் செஞ்சது அவமானம்...' 'மோர்கனுக்கு கேள்வி கேட்க எல்லா உரிமையும் இருக்கு...' - 'வெளுத்து' வாங்கிய முன்னாள் வீரர்...!
- அவரு கேட்ட கேள்விய 'ஃப்ரேம்' போட்டு வச்சுக்கோங்க...! 'முன்னாள் வீரரை கலாய்த்த நெட்டிசன்...' - தரமான 'பதிலடி' கொடுத்த சேவாக்...!
- அவர் என்ன விட்டு போயிட்டாரா...? 'அம்மாவுக்கு ஏதாவது ஆயிடும்னு மறைத்த மகன்கள்...' 'தெரிஞ்ச அடுத்த நிமிஷமே...' - நெஞ்சை உருக செய்யும் நிகழ்வு...!
- 'என் கணவர் என்னை விட்டு பிரிந்தார்...' 'இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் மறைவு...' - உலக தலைவர்கள் இரங்கல்...!
- ‘திறமையாக திட்டம் போட்டு’... ‘ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணறடிச்சுருக்காரு’... ‘கொஞ்சம் கூட மனதில் சுமையில்ல’... ‘புகழாரம் சூட்டிய கிரிக்கெட் ஜாம்பவான்கள்’...!!!
- 'ஆர்வத்துடன் வந்த கோலிக்கு’... ‘ஏத்துக்கவே முடியாமல் நடந்த விஷயம்’... 'ஆஸ்திரேலிய வர்ணனையாளர் வேதனை’...!!!
- VIDEO: கால்பந்து உலகை மிரளவைத்த மரடோனா!.. 'கடவுளின் கை' கோல் அடித்த தருணம்!.. 1986 உலகக் கோப்பை போட்டியில் என்ன நடந்தது?
- “உங்களுக்காகவே எல்லா மேட்சும் பாத்தேன்!”.. “என் ஹீரோ மறைஞ்சுட்டார்!” - இந்திய கிரிக்கெட் பிரபலம் உருக்கம்!
- 'இந்த ஐபிஎல் சீசன்ல'... 'அவரு விளையாடுவாரா, மாட்டாரா?'... 'அணியின் தோல்விக்குப்பின்'... 'முக்கிய வீரர் குறித்து வெளியான புது அப்டேட்!!!'...