'சீக்கிரமா கத்துக்கிட்டா அவருக்கு நல்லது'- கே.எல்.ராகுல் கேப்டன்ஸி எப்படி இருந்தது?- ஜாம்பவான்களின் ஸ்கோர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா- தென் ஆப்பிரிக்கா மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு கேப்டன் ஆக கே.எல்.ராகுல் எப்படி செயல்பட்டார் என்பது குறித்து பல முக்கிய கிரிக்கெட் ஜாம்பவான்களும் தங்களது ஸ்கோர் பட்டியலைக் கொடுத்துள்ளனர்.

Advertising
>
Advertising

தென் ஆப்ரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து அதிர்ச்சி கொடுத்தது.

குறிப்பாக இரண்டாவது போட்டியில் இந்தியா தோல்வி கண்ட விதம் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இரண்டாவது ஆட்டத்தின் கடைசி இன்னிங்ஸில் தென் ஆப்ரிக்க அணிக்கு, இந்திய அணி 240 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. எப்படியும் இந்தப் போட்டியையும் இந்திய அணி வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

குறிப்பாக முகமது ஷமி, சிராஜ், பும்ரா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருப்பதால் தென் ஆப்ரிக்க அணி, இலக்கை அடைவது சிரமம் என்று கருதப்பட்டது. ஆனால், நடந்தது வேறு. இந்திய பவுலர்கள் எவ்வளவோ முயற்சி எடுத்தும் தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்களை அசைத்துப் பார்க்க முடியவில்லை.

முடிவில் தென் ஆப்ரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்து டெஸ்ட் தொடரை சமன் செய்தது. இதன் மூலம் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதுகு தசைப்பிடிப்பின் காரணமாக விளையாடவில்லை. இதனால் கேப்டன் பொறுப்பு துணை கேப்டன் கே.எல்.ராகுல் இடம் சென்றது. ராகுலின் கேப்டன்ஸி குறித்து முன்னாள் இந்திய வீரர்கள் சிலர் விமர்சித்து ஸ்கோர் கொடுத்துள்ளனர்.

கம்பீர் கூறுகையில், "இது போன்ற சூழ்நிலைகளால் கே.எல்.ராகுல் கேப்டன் பொறுப்பு குறித்து கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், ராகுல் வேகமாகக் கற்க வேண்டும். சூழ்நிலைகள் எப்படி மாறும் எனத் தெரியாது. வேகமாகக் கற்றால் பிழைத்துக் கொள்ளலாம். ஃபீல்டிங் அமைப்பதில் ராகுல் என்னும் திறமையோடு செயல்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.

கவாஸ்கர் கூறுகையில், "கே.எல்.ராகுல் ஃபீல்டிங் சூழல் அமைப்பத்தில் இன்னும் நுட்பத்துடன் செயல்பட வேண்டிய அவசியத்தில் இருக்கிறார். அதில் பின் தங்கி இருக்கக்கூடாது" எனக் கூறியுள்ளார்.

CRICKET, GAUTAM GAMBHIR, KL RAHUL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்