இவர்தான் இந்திய அணியின் 'No.1 Performer’- முன்னாள் வீரர்களின் பாராட்டு மழையில் இளம் வீரர்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவுக்குச் சாதகமாக முடிந்துள்ளது. முதல் போட்டியில் இந்தியாவின் ஆதிக்கத்தை எப்படியோ சமாளித்து டிரா செய்த நியூசிலாந்து, இரண்டாவது போட்டியில் ஈடு கொடுக்க முடியவில்லை.

Advertising
>
Advertising

இதன் காரணமாக இரண்டாவது போட்டியில் மிகப் பெரும் ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது நியூசிலாந்து கிரிக்கெட் அணி. இந்த வெற்றியின் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல், உலக அளவில் டெஸ்ட் அணிகளுக்கான தர வரிசைப் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்தது விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி.

இந்த டெஸ்ட் தொடரைப் பொறுத்தவரை பல இளம் வீரர்கள் கவனம் ஈர்த்தனர். பேட்ஸ்மேன்களைப் பொறுத்தவரை மயான்க் அகர்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு சதங்கள் கடந்தனர். சிராஜ் பவுலிங்கில் நம்பிக்கைப் பாய்ச்சி உள்ளார். இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான விவிஎஸ் லட்சுமண் மற்றும் ஆகாஷ் சோப்ரா ஆகியோர், தங்களின் ஃபேவரைட் வீரர் யார் என்பதை தேர்வு செய்துள்ளார்கள்.

இதில் லட்சுமண், ‘முதல் டெஸ்டைப் பொறுத்தவரை இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. அப்போது மிகுந்த அழுத்தம் இருந்தது. அந்த நேரத்தில் களத்துக்கு வந்த ஸ்ரேயாஸ், மிகவும் பொறுப்புடனும் கவனமாக விளையாடினார். அழுத்தங்களை உள்வாங்கிக் கொண்டு ஆட்டத்துக்குத் தகுந்தாற் போல் விளையாடினார்.

மிகவும் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் சதம் அடித்தார். இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய அணி இக்கட்டான சூழலில் இருந்த போது தான் பேட்டிங் செய்ய வந்தார் ஸ்ரேயாஸ். அப்போதும் அணிக்காக சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்து அசத்தினார்’ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

அவரைப் போலவே ஆகாஷ் சோப்ராவும் ஸ்ரேயாஸுக்குப் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். ஆகாஷ் பேசுகையில், ‘இந்தியாவுக்காக ஸ்ரேயாஸ் விளையாடிய முதல் போட்டி அது. யாருக்குமே முதல் போட்டி என்பது மிகப் பெரிய சங்கடங்களையும் அழுத்தங்களையும் தர வல்லது. பலரும் விராட் கோலி அணியில் இடம் பெறுவதால் கண்டிப்பாக அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று எண்ணினோம். ஆனால் களத்துக்கு வந்து ஆட்டத்தை தனதாக்கிக் கொண்டார் ஸ்ரேயாஸ்.

முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, 145 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது போது உள்ளே வந்த ஸ்ரேயாஸ் சதம் அடித்து சாதனை புரிந்தார்.

இரண்டாவது இன்னிங்ஸில் 51 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மீண்டும் இந்தியா தடுமாறிக் கொண்டிருந்த போது, முதல் இன்னிங்ஸைப் போலவே சிறப்பாக செயல்பட்டு அரை சதம் கடந்தார். என்னைப் பொறுத்தவரை இந்திய - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடரில் ஸ்ரேயாஸ் தான் டாப் பெர்ஃபார்மர்’ என்று உறுதிபட கூறியுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியில் முதல் முறையாக அறிமுகம் ஆன ஸ்ரேயாஸ், அடுத்ததாக தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இடம் பிடித்துள்ளார். அதேபோல இந்தியாவின் ஒருநாள் அணியிலும் ஸ்ரேயாஸ் இடம் பிடித்துள்ளார்.

CRICKET, SHREYAS IYER, ஸ்ரேயாஸ் ஐயர், கிரிக்கெட்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்