‘அவர் ஒண்ணும் ஜான்டி ரோட்ஸ் இல்ல..’- இந்திய அணியில் உள்ள தமிழ்நாட்டு வீரர் குறித்து முன்னாள் வீரர் சூசகம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் சார்பில் விளையாடிய தமிழ்நாட்டு வீரர்கள் குறித்து ரசிகர்கள் கேட்ட ஒப்பீட்டுக் கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சூசகமாக பதில் அளித்துள்ளார்.

Advertising
>
Advertising

4 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணியின் சார்பில் களம் இறங்கியுள்ளார் அஸ்வின். மீண்டும் களம் கண்டதில் இருந்து தொடர்ச்சியாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பலரது கவனங்களையும் தன் பக்கம் இருத்துள்ளார். இந்தியா- நியூசிலாந்து தொடரில் 2 போட்டிகளிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். பந்துவீச்சில் சராசரியாக ஓவருக்கு 6 ரன்களுக்கும் குறைவாகவே கொடுத்துள்ளார் அஸ்வின்.

இந்திய அணிக்குள் மீண்டும் இடம் கிடைத்ததில் இருந்து அதிரடி அதிர்வுகளை அஸ்வின் ஏற்படுத்தி வருவதை போல் மற்றொரு வீரரான வாஷிங்டன் சுந்தரால் மீண்டு வருவது கஷ்டம் தான் எனக் கூறியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் ஆன ஆகாஷ் சோப்ரா. ஆகாஷ் சோப்ராவிடம் ரசிகர் ஒருவர் அஸ்வின்- வாஷிங்டன் சுந்தர் குறித்த ஒப்பீட்டுக் கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் குறித்த ஒப்பீடு குறித்து சோப்ரா கூறுகையில், “நல்ல கேள்விதான். ஆனால், என்னிடம் பதில் இல்லை. அஸ்வின் மிகச் சிறப்பாகவே ஆடியுள்ளார். வாஷிங்டன் சுந்தரையும் குறை சொல்வதற்கு இல்லை. புது பந்துகளில் நன்றாக பந்துவீச முடிகிறது என்பதாலேயே அணிக்குள் இடம் பிடித்தார் சுந்தர். அவரது பேட்டிங் கூட சிறப்பாக உள்ளது. ஆனால், அவர் சிறந்த ஃபீல்டர் கிடையாது. சுந்தர் ஒன்றும் ஜான்டி ரோட்ஸ் கிடையாது.

அணியில் மாற்றங்கள் நிகழலாம். அணி நிர்வாகம் மாறியிருக்கிறது. கேப்டன், கோச் என அனைத்து இடங்களிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முன்னர் எல்லாம் நல்ல பேட்டிங் தேவை என்று இருந்தது. பேட்டிங் நன்றாக இருக்க வேண்டும் என்று இப்போது கூட ரோகித் சர்மா நினைப்பதாகக் கூறியிருந்தார். ஆனால், யார் சிறப்பாக பவுலிங் செய்வார்கள் என்றால், சுந்தரை விட அஸ்வின் சிறந்த பவுலர். முடிவை, கேப்டன் மற்றும் கோச் தான் எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

CRICKET, RASHWIN, WASHINGTONSUNDAR, ROHIT SHARMA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்