ஆட்டத்துல அறிமுகம் செய்துட்டு 'இந்த' பவுலருக்கு ஏன் ரோகித் வாய்ப்பு கொடுக்கல?- முன்னாள் இந்திய வீரரின் 'டவுட்'..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா- நியூசிலாந்து அணிகள் நேற்று ஜெய்பூரில் நடந்த டி20 முதல் போட்டியில் மோதினர். இதில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நேற்றைய ஆட்டத்தை வென்றது. நேற்றைய போட்டியின் மூலம் ரோகித் சர்மா டி20 கேப்டன் ஆக அறிமுகம் ஆனார். முதல் போட்டியிலேயே கேப்டன் ஆகவும் பேட்ஸ்மேன் ஆகவும் வெற்றி அடைந்துவிட்டார் ரோகித் என பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Advertising
>
Advertising

ஆனால், பெரிய வெற்றிக்கு நடுவே ரோகித் சர்மா ஒரு அரிதான தவறை செய்துள்ளார் என முன்னாள் இந்திய அணி வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறுகையில், “இந்திய அணி தங்களுக்கு வேகப்பந்து வீசும் ஒரு ஆல்-ரவுண்டர் தேவை எனக் கூறி இருந்தார்கள். இதனால், வெங்கடேஷ் ஐயரை ஆறாவதாகக் களம் இறக்கினார்கள். ஆனால், வெங்கடேஷ் ஐயருக்கு பந்து வீச வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இதை ரோகித் சர்மாவின் ஒரு சின்ன தவறு என்று தான் சொல்வேன். ஒரு கேப்டன் ஆக அவர் சிறப்பாகவே அணியை நிர்வகித்தார். ஆனால், வெங்கடேஷ் ஐயர் விஷயத்தில் ரோகித் செய்த சின்ன தவறு என்னை குழப்பித்தான் விட்டிருக்கிறது. நீங்கள் டாஸ் வென்று இருக்கிறீர்கள், பந்துவீச்சை தேர்வு செய்து ஆட்டத்தை தொடங்கியிருக்க எதிர் அணி முதல் பாதியில் திணறுகிறார்கள். இந்த மாதிரியான சமயத்தில் நீங்கள் நிச்சயமாக வெங்கடேஷ் ஐயரை பந்துவீச வாய்ப்பு அளித்திருக்க வேண்டும்.

நேற்று தீபக் சஹர் மற்றும் சிராஜ் சிறப்பாக விளையாடவில்லை. இந்த சூழலில் நிச்சயமாக வெங்கடேஷ் ஐயருக்கு ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் பந்துவீச கொடுத்திருக்கலாம். இதுதான் எனக்குப் புரியாமல் நேற்றைய போட்டியில் குழப்பிவிட்டுள்ள விஷயம்” எனப் பேசியுள்ளார்.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன. இதில் நேற்றைய ஜெய்பூர் போட்டியில் இந்திய அணி வென்றது. அடுத்து இரண்டாவது போட்டி நவம்பர் 19-ம் தேதி ராஞ்சியிலும் மூன்றாவது போட்டி நவம்பர் 21-ம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெற உள்ளது. அடுத்தடுத்த போட்டிகளில் ரோகித் சர்மா- ராகுல் டிராவிட் கூட்டணி தொடர்ந்து இளம் படையையே ‘ஆடும் 11’ வீரர்களாக வைத்திருக்குமா அல்லது அணியில் மாற்றங்கள் நிகழுமா என்பது குறித்து காத்திருந்து பார்ப்போம்.

CRICKET, T20I, ROHIT SHARMA, RAHUL DRAVID

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்