"ரோஹித் கிட்ட கொஞ்சம் கவனமா தான் இருக்கணும்.." எச்சரிக்கும் முன்னாள் வீரர்.. ஓஹோ, இதான் விஷயமா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த டி 20 தொடரையும், இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி, இலங்கை அணியை வொயிட் வாஷ் செய்துள்ளது.

Advertising
>
Advertising

தோக்றோமோ ஜெய்க்றோமோ முதல்'ல சண்டை செய்யணும் .. துப்பாக்கியோட களத்துல இறங்கிய முன்னாள் 'மிஸ் உக்ரைன்' அழகி..

நேற்று நடைபெற்றிருந்த கடைசி டி 20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு, 146 ரன்கள் எடுத்திருந்தது.

அந்த அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, இலங்கை கேப்டன் சனாகா தனியாளாக அதிரடி காட்டினார். 38 பந்துகளில், அவர் 74 ரன்கள் எடுத்ததால், இலங்கை அணி கவுரவமான ஸ்கோரை எட்டியிருந்தது.

ரோஹித் ஷர்மா

தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 17 ஆவது ஓவரில் இலக்கை எட்டி அசத்தல் வெற்றியை பெற்றிருந்தது. இலங்கைக்கு எதிரான 3 டி 20 போட்டிகளிலும், அரை சதமடித்த இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதினையும் தட்டிச் சென்றிருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து, இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டிருந்தார்.

தொடர் வெற்றி

இவரது தலைமையில் ஆடி வரும் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி 20 தொடர், இலங்கை அணிக்கு எதிரான டி 20 தொடர் என அனைத்தையும் வென்று, பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளது. அது மட்டுமில்லாமல், ஆடிய 9 போட்டிகளிலும் வெற்றியை மட்டுமே இந்திய அணி பதிவு செய்துள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்திய அணியின் ஃபீல்டிங் மற்றும் பவுலிங் ரொட்டேஷன் என அனைத்திலும் தேர்ந்த தலைமையாளாராக ரோஹித் ஷர்மா செய்லபட்டு வருகிறார். இந்தாண்டு டி 20 உலக கோப்பையும் இருப்பதால், நிச்சயம் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கவனமா இருக்கணும்

ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சிக்கு பல கிரிக்கெட் பிரபலங்களும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப், ரோஹித் ஷர்மா குறித்து அசத்தல் ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

'ரோஹித் ஷர்மாவுடன் கை குலுக்கும் போது கூட, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தற்போதைய நாட்களில், அவர் தொடுவது எல்லாம் தங்கமாக மாறுகிறது. ஷ்ரேயாஸ் ஐயரை மூன்றாவது வீரராக களமிறக்குவது, சுழற்சி முறையில் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது, பந்து வீச்சு மாற்றங்கள் என அனைத்திலும் ரோஹித் ஷர்மா எடுக்கும் முடிவுகள், மாஸ்டர் ஸ்ட்ரோக் ஆக உள்ளது' என கைஃப் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு தொடரிலும் சாதனை மேல் சாதனைகளை குவித்து வரும் ரோஹித் ஷர்மாவின் நேர்த்தியான முடிவுகள் பற்றி, கைஃப் மட்டுமில்லாமல், இன்னும் பல முன்னாள் வீரர்கள் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

10 நாளுக்கு முன்னாடி மகள்.. இப்போ அப்பா.. அடுத்தடுத்து நடந்த துயரம்.. மனம் தளராத கிரிக்கெட் வீரரின் அர்ப்பணிப்பு

CRICKET, FORMER INDIAN PLAYER, ROHIT SHARMA CAPTAINCY, முன்னாள் வீரர், ரோஹித் ஷர்மா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்