"இன்னைக்கு என்னோட விக்கெட்டை நீ எடுத்திருக்கலாம்".. சச்சினின் சவால்.. சீக்ரட்டை உடைத்த முன்னாள் வீரர்.. God of cricket-னா சும்மாவா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் பற்றி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

Advertising
>
Advertising

Also Read | "ரெக்கார்ட் உருவாக்குறது தான் எங்க வேலையே".. ஒரு நாள் போட்டியில் முதல் முறை.. வரலாற்றை மாற்றி எழுதி சாதனை படைத்த இந்திய அணி!!

உலக கிரிக்கெட் வரலாற்றில் எப்போதும் நிலைத்திருக்கக்கூடிய பெயர் சச்சின் டெண்டுல்கர். அதிக ஒருநாள் போட்டிகள், அதிக சதங்கள் என சச்சின் வைத்திருக்கும் ரெக்கார்டுகளை முறியடிக்க இன்றும் பல முன்னணி வீரர்கள் திணறிவருகின்றனர். 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சச்சின் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

தனது 24 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில், டெண்டுல்கர் 53.78 சராசரியுடன் 15,291 டெஸ்ட் ரன்களையும், 44.83 சராசரியில் 18,426 ODI ரன்களையும் எடுத்துள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்களையும் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களையும் விளாசியுள்ளார். இப்படி பல சாதனைகளை படைத்த சச்சின் கடந்த 2013 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆர்.பி சிங் சச்சினுடனான தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் SAT20 தொடரில் வர்ணனையாளராக இருந்துவரும் சிங், சச்சின் பற்றி பேசுகையில்,"சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டை நீங்கள் எடுத்தால், அது மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும். ஒரு முறை நான் அவரது விக்கெட்டை வீழ்த்தினேன்.

பின்னர் அவர் அது பற்றி பேசுகையில், ‘ஆமாம் இது ஒரு நல்ல டெலிவரி. நான் அதை தவறவிட்டேன். ஆனால் அது மீண்டும் நடக்காது’ என்றார். அடுத்த முறை நாங்கள் ஒருவரையொருவர் எதிர்கொண்டபோது, ​​நான் வேறு ஒரு அணிக்காக விளையாடிக்கொண்டிருந்தேன். அபாரமாக ஆடிய அவர் சதம் விளாசினார். நான் அதிக ரன்களை விட்டுக்கொடுக்காததுதான் எனக்கு கிடைத்த ஒரே ஆறுதல்" என தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, SAT20 தொடரில் வர்ணனையாளராக இருந்துவரும் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா 2014 ஆம் ஆண்டு கார்டிஃப் மைதானத்தில் சதம் அடித்தபிறகு சச்சின் தனக்கு மெசேஜ் அனுப்பி இருந்ததாகவும் அதில்,"உன்னை எப்போதும் முழுமையாக நம்பு" என அவர் குறிப்பிட்டிருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

Also Read | Content Warning : ஃபீல்டிங்கில் நடந்த விபத்து... ரசிகர்களை பதற வைத்த சம்பவம்.. வீடியோ..!

CRICKET, RUDRA PRATAP SINGH, INDIAN PACER RP SINGH, SACHIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்