"தோனிக்காக தான் விளையாடினேன்.. அப்புறம் தான் நாட்டுக்காக".. உருகிய சின்ன தல ரெய்னா..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் சுரேஷ் ரெய்னா மகேந்திர சிங் தோனி உடனான தனது நட்பு குறித்து பேசி இருக்கிறார். இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | பிரபல தொழிலதிபருக்கு நடிகர் அமிதாப் பச்சன் கொடுத்த சர்ப்ரைஸ்.. வைரல் போஸ்ட்..!

கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து தற்போது வரை சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி தொடர்கிறார். மற்ற அணிகளுக்கு கேப்டன்கள் ஒருபுறம் மாறிக்கொண்டே இருக்கையில் தோனி இத்தனை ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார். ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் தோனி இதுவரையில் 234 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 4978 ரன்களை அவர் குவித்திருக்கிறார். இதில் 24 அரை சதங்களும் அடங்கும்.

Images are subject to © copyright to their respective owners.

மேட்ச் பரபரப்பான சூழ்நிலையில் இருக்கும்போதும், பொறுமையுடன் அணியை வெற்றியின் பக்கம் அழைத்துச் செல்வதில் தோனி ஒரு வித்தைக்காரர். இதன் காரணமாகவே ரசிகர்கள் தோனியை கூல் கேப்டன் என்றும் மிஸ்டர் கூல் என்றும் அழைக்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனான தோனியை ரசிகர்கள் 'தல' என்றும் சுரேஷ் ரெய்னாவை 'சின்ன தல' என்றும் குறிப்பிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

பல ஆட்டங்களில் இவருடைய பங்களிப்பின் காரணமாக அணி வெற்றியை ருசித்திருக்கிறது. இருவருக்கும் இடையேயான நட்பு குறித்து கிரிக்கெட் வட்டாரங்களில் அதிகமானோர் இன்னும் பேசி வருகின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ரெய்னா விலகினார். அதன்பிறகு அவரை அணி நிர்வாகம் தக்கவைக்கவில்லை.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள ரெய்னா தோனியுடனான தனது நட்பு பற்றி மனம் திறந்திருக்கிறார். இதுபற்றி அவர் பேசுகையில்,"நாங்கள் ஒன்றாக பல போட்டிகளில் விளையாடியுள்ளோம். அவருடன் இந்தியாவுக்காகவும், சிஎஸ்கே அணிக்காகவும் விளையாடும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. இதன்மூலம் எங்களுக்கு நிறைய அன்பு கிடைத்தது. நான் காஜியாபாத்தில் இருந்து வந்தவன். தோனி ராஞ்சியில் இருந்து வந்தவர். முதலில் தோனிக்காக தான் விளையாடினேன். பின்னர் தான் நாட்டுக்காக விளையாடினேன். அதுதான் எங்களுக்கிடையேயான பிணைப்பு. நாங்கள் பல இறுதிப் போட்டிகளில் விளையாடி, உலகக் கோப்பையையும் வென்றோம். அவர் ஒரு சிறந்த தலைவர் மற்றும் ஒரு சிறந்த மனிதர்" என்றார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி தோனி தனது ஓய்வை அறிவித்தார். அதே நாளில் ரெய்னாவும் தனது ஓய்வினை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | கிரவுண்ட்ல திடீர்னு கேட்ட பயங்கர சத்தம்.. உடனே வெளியேற்றப்பட்ட வீரர்கள்.. PSL போட்டியின் போது நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

CRICKET, MS DHONI, SURESH RAINA, INDIAN CRICKETER, MS DHONI CAPTAINCY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்