ரிஷப் பண்ட் இந்த விஷயத்துல அவசரப்படக்கூடாது.. சவுரவ் கங்குலி கொடுத்த அட்வைஸ்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் துவங்க இருக்கும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான ரிஷப் பண்ட் குறித்து பேசியிருக்கிறார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | விராட் கோலியை முதலில் பார்த்ததும் தப்பா புரிஞ்சுகிட்ட ஏபிடி.. பின்னர் தெரிய வந்த உண்மை.. சுவாரஸ்ய பின்னணி!!
ரிஷப் பண்ட்
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆக வலம் வருபவர் ரிஷப் பண்ட். இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், பல்வேறு போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி வெற்றியை தேடிக் கொடுத்துள்ளார். டெஸ்ட், டி 20 மற்றும் ஒரு நாள் போட்டி என அனைத்திலும் சிறந்து விளங்கி வரும் ரிஷப் பண்ட், ஐபிஎல் தொடரிலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார்.
விபத்து
இதனிடையே கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே பண்ட், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தின் காரணமாக அவருக்கு முழங்காலில் தசைநார் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் பண்ட் மீண்டும் இந்திய அணியில் இணைய மாதக்கணக்கில் காலம் ஆகலாம் என கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
விபத்திற்கு பிறகு ஒவ்வொரு நாளையும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்வதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார் பண்ட். மேலும், தான் நடைப்பயிற்சி செய்யும் வீடியோவையும் அண்மையில் அவர் பதிவிட்டிருந்தார்.
கங்குலி அட்வைஸ்
இந்த சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி ரிஷப் பண்டுக்கு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். இதுகுறித்து டெல்லி அணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கங்குலி,"இந்திய அணி அவரை மிஸ் செய்கிறது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். அவர் இளைஞர் ஆகவே அவருக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. அவர் சிறந்த வீரர். குணமடைய அவர் இன்னும் நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர் குணமாக நாங்கள் வாழ்த்துகிறோம். விரைவில் அவரை சந்திப்பேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
பண்ட் சிகிச்சையில் இருப்பதால் டெல்லி அணிக்கு டேவிட் வார்னர் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், அக்சர் படேல் துணை கேப்டனாக பணியாற்றுவார் என அந்த அணி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- திருமண வாழ்க்கை.. "அதுல நான் தோத்துட்டேன், திரும்பவும் கல்யாணம் பண்ண நெனச்சா".. ஷிகர் தவான் ஷேரிங்ஸ்!!
- ஆடுனது 6 மேட்ச், அதுல 4 மேட்ச் -ல இப்டி ஒரு மோசமான சாதனையா?.. பாகிஸ்தான் வீரருக்கு வந்த சோதனை!!
- "தல அப்பவே தாறுமாறு தான் போலயே".. தோனியை முதல் முறை பார்க்கும் போது நடந்த சம்பவம்.. ரெய்னா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!!
- "இந்தா அறிவிச்சுட்டாங்கல்ல".. இனி ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலா இவரு தான் KKR கேப்டன்.. வெளியான Official தகவல்!!
- "கேட்ச் எடுக்குறப்போ இப்டியும் மேஜிக் பண்ண முடியுமா?".. பவுண்டரி லைனில் நடந்த அற்புதம்.. மெய்சிலிரித்து போன ரசிகர்கள்!!.. வீடியோ
- "நம்பர் 18 நான் கேட்டு வாங்குனதில்ல, ஆனா".. ஜெர்சி நம்பர் பின்னாடி இப்டி ஒரு ரகசியமா?.. கலங்கிய விராட் ரசிகர்கள்!!
- " பீனிக்ஸ் பறவை போல".. ரிஷப் பண்டை சந்தித்த சுரேஷ் ரெய்னா.. கூட யாரெல்லாம் இருக்காங்க பாருங்க..!
- சூப்பர் ஸ்டார் BGM.. பென் ஸ்டோக்ஸ் & மொயீன் அலியின் அதகளமான என்ட்ரி.. வைரலாகும் வீடியோ..
- காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய வீரர்கள்.. முழு லிஸ்ட் இதோ...!
- மாஸ் என்ட்ரி கொடுத்த பென் ஸ்டோக்ஸ்.. CSK அணி பகிர்ந்த தரமான வீடியோ..!