‘எப்டி அவர் வந்தாலே விக்கெட் விழுந்துடுது..? இத்தனை நாளா ஏனய்யா ஒதுக்கி வச்சிருந்தீங்க?’- இந்நாள் பவுலருக்காக குமுறும் முன்னாள் வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியில் ‘இந்த’ பவுலர் கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளிலும் ரு விக்கெட் கூட எடுக்காமல் இருந்ததே இல்லை எனப் பாராட்டியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் ஆன ஆகாஷ் சோப்ரா.

Advertising
>
Advertising

கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பின்னர் சுமார் 4 ஆண்டுகள் கழித்து கிரிக்கெட்டின் குறுகிய கால போட்டிகளில் விளையாடத் தொடங்கி உள்ளார் அஸ்வின் ரவிச்சந்திரன். டி20 உலகக்கோப்பை தொடரின் மூலமாக அணியில் மீண்டும் இணைந்த அஸ்வின் நியூசிலாந்துக்கு எதிரான ஜெய்பூர் போட்டியில் தனக்கான இடத்தை நிலை நிறுத்தி உள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியிலேயே ஆடும் 11 வீரர்கள் அணிப் பட்டியலில் இடம் பிடித்த அஸ்வின் தனது அபார பந்துவீச்சால் 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2-வது ராஞ்சி போட்டியிலும் சொற்ப ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். அஸ்வினின் அபாரமான பந்துவீச்சு நியூசிலாந்து வீரர்கள் ரன்கள் எடுப்பதை கட்டுக்குள் வைக்க உதவியது.

அஸ்வினின் ஆட்டம் குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், “கடந்த ஐந்து ஆட்டங்களில் அஸ்வின் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். டி20 உலகக்கோப்பையின் போது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து சமீபத்திய ராஞ்சி டி20 போட்டி வரையில் அஸ்வினின் ஆட்டம் சிறப்பாகவே இருந்தது. மிகவும் குறைவான ரன்களே கொடுத்து நல்ல விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

இந்த சமயத்தில் ‘அஸ்வின் எப்படி இப்படி ஆடுகிறார்?’ எனக் கேட்கின்றனர். அஸ்வின் எதையும் புதிதாக செய்யவில்லை. அவர் எங்கேயும் செல்லவில்லை. நீங்கள் தான் அவரைத் தேர்ந்தெடுக்காமல் விட்டுவிட்டீர்கள். கடந்த 10 ஆண்டுகளில் பார்த்தால் அஸ்வினின் ஆட்டம் நிலையானதாகவே இருந்து வருகிறது. ஐபிஎல் தொடரில் கூட விக்கெட்டுகளை வீழ்த்துவதில் அஸ்வின் மிகவும் சிறப்பானவர். அதேபோல், குறைவான ரன்களை மட்டும் தான் விட்டுக்கொடுப்பார்.

ஆட்டத்தின் எந்த ஆர்டரில் வேண்டுமானாலும் அவரால் சிறப்பான பந்துவீச்சை கொடுக்க முடியும். 15-வது அல்லது 16-வது ஓவரில் கூட அஸ்வினின் வேகம் குறையாது. அஸ்வின் இன்று சிறப்பாக விளையாடுகிறார் என ஆச்சர்யப்படாதீர்கள். அவர் என்றுமே சிறப்பாகத்தான் விளையாடி வருகிறார்” எனக் கூறியுள்ளார்.

CRICKET, ASHWIN, INDVSNZ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்