"ப்ளீஸ்.. அதை கண்டுபிடிச்சு கொடுங்க".. இந்தியர்களிடம் ஹெல்ப் கேட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பீட்டர்சன்.!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான கெவின் பீட்டர்சன் தனக்கு உதவி செய்யுமாறு டிவிட்டரில் கோரிக்கை வைக்க, சிறிது நேரத்திலேயே அவருக்கான வழிகாட்டல் கிடைத்திருப்பது தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

"ப்ளீஸ்.. அதை கண்டுபிடிச்சு கொடுங்க".. இந்தியர்களிடம் ஹெல்ப் கேட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பீட்டர்சன்.!
Advertising
>
Advertising

34 வருஷத்துக்கு அப்புறம் ஆஸ்கார் நிகழ்ச்சியில் நடக்க இருக்கும் மாற்றம்..!

இங்கிலாந்து அணியின் முன்னாள் வலது கை பேட்ஸ்மேன் ஆன கெவின் பீட்டர்சன் தற்போது ஐபிஎல் போட்டிகளுக்கு வர்ணனை செய்து வருகிறார். அதற்காக கடந்த முறை இந்தியா வந்திருத்த போது அவர் தனது பான் கார்டை தவறவிட்டுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் இந்தியா திரும்ப இருப்பதால் தனக்கு பான் கார்டு தேவைப்படுவதாகவும் இந்தியா உதவ வேண்டும் எனவும் தனது டிவிட்டர் பக்கத்தில் பீட்டர்சன் குறிப்பிட்டுள்ளார்.

Former England player, Peterson seeks help Regarding lost PAN Card

தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பீட்டர்சன்,"தயை கூர்ந்து உதவவும் இந்தியா! நான் எனது பான் கார்டை தவறவிட்டேன். இந்தியாவுக்கு வந்து கொண்டிருக்கிறேன். வேலை நிமித்தமாக எனக்கு எனது பான் கார்டு தேவைப்படுகிறது. யாரேனும் எனக்கு இது தொடர்பாக உதவ முடியுமா? நான் யாரை இதற்காக தொடர்பு கொள்ள வேண்டும்?” என குறிப்பிட்டிருந்தார்.

உதவி

பீட்டர்சனின் டிவிட்டர் பதிவிற்கு பதில் அளித்த இந்திய வருமான வரி துறை," உங்களுக்கு உதவி செய்யவே நாங்கள் இருக்கிறோம். உங்களுடைய பான் கார்டு குறித்த தகவல்கள் உங்களிடத்தில் இருந்தால் கீழ்க்கண்ட லிங்கில் சென்று உங்களுடைய பான் கார்டை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்" என லிங்க்-களை தங்களது பதிவில் கமெண்டாக பதிவிட்டிருந்தது.

அதேபோல, பான் கார்டு குறித்த தகவல்கள் இல்லையென்றால் எப்படி பான் கார்டை பெறுவது? என்பது குறித்தும் வருமான வரித்துறை பீட்டர்சனுக்கு வழிகாட்டியது.

நன்றி

வருமான வரி துறையின் பதிவுக்கு நன்றி தெரிவித்த பீட்டர்சன், தனது பான் கார்டு குறித்த தகவல்களை மின்னஞ்சல் மூலமாக அனுப்பியுள்ளதாக வருமான வரித் துறையிடம் தெரிவித்திருந்தார். மேலும், இதுகுறித்து உரையாட யாரவது எனக்கு மெசேஜ் அனுப்ப முடியுமா? எனவும் கேட்டிருந்தார்.

பான் கார்டை காணாமல் போனதால் உதவிகேட்டு பதிவுபோட்ட பீட்டர்சனுக்கு உடனடியாக உதவி கிடைத்தது தற்போது டிவிட்டர் பக்கம் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.

‘அவங்க எங்க அம்மா தான்’.. 4 வருச தவிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த போன் கால்.. ஆனந்த கண்ணீரில் குடும்பம்..!

FORMER ENGLAND PLAYER, PETERSON, PAN CARD, CRICKET PLAYER PETERSON, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர், பீட்டர்சன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்