“CSK-க்கு... 2010-ல் நடந்த அதே Magic இந்த தடவ நடக்குமா???’ - ’முன்னாள் ‘சென்னை’ வீரரின் பதிலால்... சோகத்தில் ரசிகர்கள்!!! - “யாருய்யா, அது...?? என்ன சொன்னாரு???”

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் என்றாலே பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை சற்று தடுமாற்றத்தில் உள்ளது.

லீக் சுற்றின் முதல் பாதியில் 7 போட்டிகளில் இரண்டில் மட்டுமே சென்னை அணி வெற்றி கண்ட நிலையில், நேற்று நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

ஆனாலும் மீதமுள்ள 6 போட்டிகளில் ஐந்திலாவது வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் சென்னை அணி உள்ளது. இதுவரை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் சென்னை அணி இருந்ததில்லை. அந்த சாதனையை இந்த முறையும் சென்னை அணி தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி இதே போன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்த போது மீதமுள்ள போட்டிகளில் சிறப்பாக வெற்றி பெற்று அந்த ஆண்டிற்கான ஐபிஎல் கோப்பையையும் தட்டிச் சென்றது. அதே போல இந்த முறையும் சாதனை வெற்றி பெற்று பிளே ஆஃப் முன்னேறும் என நம்பிக்கையுடன் உள்ளனர்.

இந்நிலையில், 2010 ஆம் ஆண்டு சென்னை அணிக்காக ஆடிய சுப்ரமணியம் பத்ரிநாத், 2010 ஆம் ஆண்டைப் போலவே இந்த முறையும் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ளார். 

 

 

'2010 ஆம் ஆண்டை விட இரண்டு விஷயங்கள் இந்த முறை கடினமாக சிஎஸ்கே அணிக்கு அமையும். காரணம், 2010 ஆம் ஆண்டில் இரண்டாம் பாதி லீக் ஆட்டங்களில் பெரும்பாலான ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி பலம் வாய்ந்தவை என்பதால் வெற்றி பெற்று பிளே ஆஃப் முன்னேறியது. ஆனால் இந்த முறை துபாய் என்பதால் அதற்கான வாய்ப்புகள் குறைவு. 

இன்னொரு காரணம், 2010 ஆம் ஆண்டில் சென்னை வீரர்கள் மிகுந்த உடல் தகுதியுடனும், சிறந்த பார்மிலும் இருந்தனர். இதனால், 2010 ஆம் ஆண்டை போல இந்த முறை சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது என்பது கடினம் தான்' என பத்ரிநாத் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்