"தோனிக்கு எப்போதுமே டீம் தான் முக்கியம்.. அதுக்கு அப்புறம் தான் மத்தது எல்லாம்".. மனம் திறந்த சேவாக்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான மகேந்திர சிங் தோனி குறித்து மனம் திறந்திருக்கிறார் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடியது. இதில் குஜராத் வெற்றி பெற்றது. இதனையடுத்து நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் லக்னோவை எதிர்கொண்டது சென்னை. கிட்டத்தட்ட 4 வருடங்கள் கழித்து சென்னை சேப்பாக்கத்தில் CSK போட்டி நடைபெற்றதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்தனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. ருத்துராஜ் கெய்க்வாட்  - டிவான் கான்வே ஜோடி அபாரமான துவக்கத்தை அளித்தது. பின்னர் வந்த மொயீன் அலி, தூபே தங்களுடைய அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இறுதியாக களத்திற்கு வந்த தோனி 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

Images are subject to © copyright to their respective owners.

இதன் பலனாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்களை குவித்தது. இதனையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. அந்த அணியின் மேயர்ஸ் - ராகுல் ஜோடி அபாரமான துவக்கத்தை அளித்தாலும் பவர்பிளே-க்கு பிறகு ஆட்டத்தை சென்னை வசம் கொண்டுவந்தார் மொயீன் அலி. சீரான இடைவெளியில் அந்த அணி விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக 20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை எடுத்தது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

Images are subject to © copyright to their respective owners.

இந்த போட்டியில் இரண்டு சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடந்தார் தோனி. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்," இதை நீங்கள் தோனியிடம் கேட்டால் இதனால் என்ன வித்தியாசம் நடந்துவிட்டது? என கேட்பார். அவருக்கு அணியின் வெற்றி மட்டுமே எப்போதும் முக்கியமானதாக இருக்கும். தனிப்பட்ட சாதனைகளை பற்றி எப்போதுமே அவர் பெரிதாக நினைத்ததில்லை. 5000 ரன்களை கடந்தால் என்ன? அது 7000 ரன்களாக இருந்தால் என்ன? அவை எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்பார். நல்ல பேட்ஸ்மேன்கள் ஓய்வு பெற்றபிறகு அவர்கள் அடித்த ரன்களை ரசிகர்கள் நினைவுகூர்வார்கள்" என தெரிவித்திருக்கிறார்.

CSK, MS DHONI, VIRENDER SEHWAG

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்