'ஐசிசி ரூல்ஸ் என்ன சொல்லுதுன்னு செக் பண்ணி பார்த்தேன்...' 'என்ன பொறுத்த வரைக்கும் அன்னைக்கு டி காக் பண்ணது...' - முன்னாள் வீரர் கருத்து...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ஃபாக்கர் ஜாமனின் ரன் அவுட் சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா தன்னுடைய யூடியூப் சேனலில் டி காக்கின் தவறு ஏதும் இல்லை என கூறியுள்ளார்.

அதில், '155 பந்துகளில் 193 ரன்களை எடுத்த ஃபாக்கர் ஜாமனால் பாகிஸ்தான் அணியை வெற்றி கோட்டுக்கு அருகே கொண்டு சென்று வீழ செய்தது அந்த ரன் அவுட் தான். அதில் டி காக்கின் தவறு ஏதும் இல்லை எனவும் ஐசிசி விதிகளை ஆராய்ந்தால் தெரிகிறது.

என்னுடைய கருத்துப்படி அவர் தெரு கிரிக்கெட்டில் விளையாடும் ஸ்மார்ட்டான சாமர்த்தியத்தை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் செய்து விட்டார்' எனக் கூறியுள்ளார்.

போட்டியின் போது டி காக், பாக்கர் ஜாமனை ரன் அவுட் செய்ய அவரது கவனத்தை திசை திருப்பி அவுட் செய்திருந்தார். விக்கெட்டை இழந்த பாக்கர் ஜாமன், இதில் அவரது தவறு ஏதும் இல்லை, கவனக்குறைவாக நான் செயல்பட்டது தான் தவறு என ஆறுதலாக கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தற்போது சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஹாட் டாக்காகி உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்